- Home
- Astrology
- Astrology: பிறருக்காக வாழும் 3 கொடை வள்ளல் ராசிகள்.! சுயநலமே இல்லாத நல்லவர்கள் இவர்கள்.!
Astrology: பிறருக்காக வாழும் 3 கொடை வள்ளல் ராசிகள்.! சுயநலமே இல்லாத நல்லவர்கள் இவர்கள்.!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் சுயநலம் பாராமல் பிறருக்கு உதவும் கொடை வள்ளல் குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கடகம், துலாம், மற்றும் மீனம் ஆகிய ராசயினர் தங்கள் தாராள மனப்பான்மையால் சமூகத்தில் மரியாதையையும், புகழையும் பெறுகிறார்கள்.

கொடை வள்ளல்கள் என போற்றப்படுகிறார்கள்.!
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்தன்மையான குணாதிசயங்கள் இருக்கின்றன. சிலர் அதிகம் பேசுவார்கள், சிலர் அமைதியாக இருப்பார்கள், சிலர் தங்கள் நலனை மட்டுமே பார்ப்பவர்கள். ஆனால், சிலர் தங்கள் நலனை விட பிறர் நலனையே முதன்மை எனக் கருதி வாழ்பவர்கள் உண்டு. அவர்கள் கொடை வள்ளல்கள் என போற்றப்படுகிறார்கள். தமக்கு உள்ளதை தாராளமாக பிறருடன் பகிர்ந்து கொள்ளும் பண்பு கொண்ட இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் எப்போதும் மரியாதைக்குரியவர்களாக மதிக்கப்படுகிறார்கள். ஜோதிடக் கணிப்பின்படி சுயநலம் அற்ற இந்த தன்மையுடன் வாழும் மூன்று முக்கியமான ராசிகள் பற்றி பார்க்கலாம்.
கடக ராசி
கடக ராசிக்காரர்கள் அன்பும், அக்கறையும் நிறைந்தவர்கள். பிறர் சிரமத்தில் இருந்தால் தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் உதவி செய்ய முனைந்துவிடுவார்கள். பணம், பொருள், அறிவு எது இருந்தாலும் கொடையளிப்பதில் இவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. இவர்களின் குடும்ப பாசம் மட்டுமல்ல, அடுத்தவரின் பிரச்சினையும் இவர்களுக்கு தங்களுடைய பிரச்சினை போலத்தான் இருக்கும். மனம் கனிந்த இரக்கமுள்ளவர்கள் என்பதால், இவர்கள் பிறரிடம் எதிர்பார்ப்பதில்லை. நான் உதவினேன், அதற்குப் பதில் கிடைக்குமா? என்ற எண்ணமே இவர்களிடம் இருக்காது.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்கள் சமநிலை மற்றும் நீதி உணர்வு மிகுந்தவர்கள். இவர்களின் உள்ளம் எப்போதும் பிறருக்கு ஆதரவாக இயங்கும். ஒரு நல்ல ஆலோசனை வேண்டுமானாலும், நெருக்கடியில் உதவும் கை வேண்டுமானாலும், துலாம் ராசிக்காரர்கள் முதலாவதாக முன்வருவார்கள். இவர்களுக்கு சுயநலம் என்றதே தெரியாது. எனக்கு மட்டுமே நல்லது வேண்டும் என்பதற்குப் பதிலாக, எல்லாருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதே இவர்களின் விருப்பம். இதனால் இவர்களிடம் மக்கள் எப்போதும் ஈர்க்கப்படுவார்கள்.
மீன ராசி
மீன ராசிக்காரர்கள் ஆன்மிகம் நிறைந்தவர்கள். இவர்களுக்கு பிறருக்கு உதவுவது ஒரு கடமையாகவே இருக்கும். பிறர் மகிழ்ச்சி தான் தங்களின் மகிழ்ச்சி என்ற எண்ணத்தில் வாழ்பவர்கள். கொடையளிப்பதில் இவர்களுக்கு எல்லையே இல்லை. யாரேனும் கஷ்டத்தில் இருப்பதைப் பார்த்தால், தங்கள் சுய நலனை மறந்து உதவ முனைந்துவிடுவார்கள். நற்பண்பு, தாராளம், இரக்கம் என்பவற்றின் சங்கமமாக இவர்களை சொல்லலாம்.
மற்றவர்களுக்கு உதவுவதில் மனநிறைவு
கடக, துலாம், மீன ராசிக்காரர்கள் கொடை வள்ளல்களாய் சமூகத்தில் பிரபலமானவர்கள். இவர்களிடம் சுயநலம் குறைவானது மட்டுமல்ல, மற்றவர்களுக்கு உதவுவதில் மனநிறைவு அடைவதும் இவர்களின் சிறப்பு. பிறருக்கு உதவுவது தமக்கே நல்ல புண்ணியத்தை சேர்க்கும் என்ற நம்பிக்கையோடு வாழும் இவர்களால், சமூகம் இன்னும் நல்லதொரு இடமாக மாறுகிறது. ஜோதிடக் கணிப்பின்படி, இந்த மூன்று ராசிக்காரர்களின் வாழ்வில் அவர்களின் தாராள மனப்பான்மை காரணமாக, மக்கள் ஆதரவு, புகழ், இறைவன் அருள் என்றும் நிலைத்திருக்கும்.