- Home
- Astrology
- Zodiac Sign: பெண்களே, நீங்கள் இந்த ராசியா.?! கடைசி வரை கணவர் உங்கள் காலடியில் கிடப்பார்.! அன்புக்கும் காதலுக்கும் லீவே இருக்காது.!
Zodiac Sign: பெண்களே, நீங்கள் இந்த ராசியா.?! கடைசி வரை கணவர் உங்கள் காலடியில் கிடப்பார்.! அன்புக்கும் காதலுக்கும் லீவே இருக்காது.!
ஜோதிடத்தின் படி, சில ராசி பெண்கள் கடைசி வரை கணவரின் அன்பைப் பெறுவார்கள். மீன ராசிப் பெண்கள் அன்பிலும் பாசத்திலும் கணவரைக் கட்டிப்போடுவார்கள், வாழ்க்கையில் நிம்மதியை அடைவார்கள்.

அன்பும் அறனும் உடைத்தாயின்.!
ஒரு சிலருக்கு மட்டுமே அன்பும் காதலும் கடைசி வரைக்கும் கிடைக்கும். அந்த வகையில், ஜோதிட அமைப்பின்படி ஒரு சில பெண்கள் தனது கடைசி காலம் வரை கணவரிடம் இருந்த அன்பை மட்டுமே பெறும் வாய்ப்பை பெறுவர். யாருக்கெல்லாம் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பதை அழகாக கூறுகிறது ஜோதிட நூல்கள்.
காதலெனும் நிம்மதி! அதுதான் சன்னதி!
ஒருவரின் வாழ்க்கையில் எத்தனை உறவுகள் இருந்தாலும் உண்மையான காதலும் அன்பும் மட்டுமே நிம்மதியை கொடுக்கும். அதிலும் திருமண உறவில் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடைக்கும். குறிப்பாக இந்த ஒரு ராசியில் பிறந்த பெண்கள் – தாங்கள் விரும்பும் கணவரை காதலிலும், பாசத்திலும் கட்டிப்போட வல்லவர்கள். அவர்களுக்கு காதலில் ஓய்வு என்றே கிடையாது. கணவர் கடைசி வரை அவர்களிடமே பாசத்துடன், மரியாதையுடன், தீவிர காதலுடன் இருப்பது முற்றிலும் உண்மை என்கிறது ஜோதிட நூல்கள்.
அந்த ராசி என்ன தெரியுமா?!
மீனம் (Pisces)!
மீன ராசி பெண்கள் எப்போது தத்துவம் பேசும் தன்மை கொண்டவர்கள். நடை உடை மற்றும் பேச்சில் மிகுந்த கனிவு, அடுத்தவர்களை மதிக்கும் குணம், மென்மையான பேச்சு, எல்லாவற்றிலும் அமைதியுடன் நடந்துகொள்ளும் மனோபாவம் ஆகியவை மீன ராசி பெண்களின் குணம். இவை இவர்களை எல்லா ஆண்களுக்கும் மிகவும் ஈர்க்கும் ஒரு தன்மை கொண்டவர்களாக மாற்றுகின்றன. காதல் என்பது சுயநலமற்ற பாசம், எல்லையில்லா பரிவு, அளவு கடந்த அன்பு. அதற்கு சரியான எடுத்துக்காட்டு மீன ராசிக்கார பெண்கள் தான் என்கின்றனர் ஜோதிட வல்லுணர்கள்.
அன்பே வாழ்வின் ஆதாரம்.!
மீன ராசி பெண்கள் யார் மீது அன்பு செலுத்தினாலும் அது முழுமனதுடன் இருக்குமாம். தாயாகவும், சேயாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும் அவர்கள் செலுத்தும் அன்பு எப்போதும் மாறவே மாறாது என்கிறது ஜோதிடம். தான் விரும்பும் ஆணுக்கோ கணவருக்கோ அவர்கள் தேவையான பாசம், அரவணைப்பு, விசுவாசம் உள்ளிட்ட அனைத்தையும் கொடுக்க தயங்கமாட்டார்கள். கணவரின் மனநிலை என்னவென்று அவரே சொல்லாமலே புரிந்து கொள்ளும் அற்றல் மீன ராசியை கொண்ட பெண்களுக்கு பிறப்பிலேயே இருக்குமாம். இதுவே ஒரு ஆணை முழுமையாக ஈர்க்கும் முக்கியமான காரணம். அவர்களின் பிரச்சினைகளில் தோள்கொடுத்து நின்று, வெற்றிக்கு வழிகாட்டும் சக்தி பெண்களில் இருந்தால் தான், கணவர் ஒருவரின் வாழ்க்கை நிம்மதியாகும்.
காலில் விழுந்த கிடக்க காரணம்.!
மீன ராசி பெண்கள் மிகவும் கனிவானவர்கள், ஆனால் அதே சமயம் தைரியமும் கொண்டவர்கள் என்கிறது ஜோதிடம். காதலில் முழு அர்ப்பணிப்பும், தங்களது நெறியிலிருந்து சிறிதும் விலகாமலும் இருக்கும் மீன ராசி பெண்கள் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கலாம். தங்களை நேசிப்பவரை இறுதிய வரை நேசித்து, அவர்களை காப்பாற்றும் தெய்வத் தன்மை இவர்களிடம் இருக்கும். கணவரின் துக்கங்களில் கண்ணீராகவும், சந்தோஷத்தில் புன்னகையாகவும் தங்கள் நிலையை மாற்றக் கூடியவர்கள் என்கின்றனர் ஜோதிடர்கள்.
பாசமும் அன்பும் வாழ்வை இனிமையாக்கும்.!
குடும்பத்தில் மீன ராசிக்கார பெண்கள் அமைதியான சூழலை உருவாக்குவார்கள். பாசத்தையும் அன்பையும் அளவுக்கு அதிகமாக செலுத்தி கணவரை மனதளவில் கட்டிப்போடுவார்கள். வாக்குவாதம் இல்லாமல், அமைதியான வார்த்தைகளால் கணவரை மாற்றும் திறன் இவர்களிடம் இருக்கும் என்றால் அது மிகையல்ல.
எதுவும் மிகையல்ல! காதலுக்கு லீவ் இல்லை
நீங்கள் மீன ராசிக்கார பெண் என்றால், உங்கள் கணவன் உங்கள் காலடியில் கிடப்பார் என்பது மிகைப்படுத்தி கூறியதாய் தோன்றலாம். ஆனால் உண்மையில், அவர் உங்களை விட்டே பிரியாமல், உங்கள் பாசத்தில் விழுந்து உங்களை உண்மையாகவும் முழுமையாகவும் நேசிப்பார் என்பதே உண்மை. காரணம், உங்கள் அன்பில் லீவ் இல்லை… இடைவேளை இல்லை… என்றும் தொடரும் காதலின் ஊற்று தான் நீங்கள்! உங்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் நிம்மதி மட்டுமே கிடைக்கும்.