- Home
- Astrology
- ஆகஸ்ட் 8, 9, 10 தேதிகளில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை.! 3 நாள் லீவு துள்ளி குதிக்கும் மாணவர்கள்
ஆகஸ்ட் 8, 9, 10 தேதிகளில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை.! 3 நாள் லீவு துள்ளி குதிக்கும் மாணவர்கள்
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் கிடைக்கவுள்ளதால் மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஆகஸ்ட் 8, 9, 10 மற்றும் 15, 16, 17 தேதிகளில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது.

பள்ளிகளுக்கு சனி, ஞாயிறு விடுமுறை
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கப்பட்டது. சுமார் 45 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தொடங்கினர். நீண்ட விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கு ஏதேனும் விடுமுறை கிடைக்குமா.?என காத்திருந்தனர்.
இந்த நிலையில் பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டது. அந்த வகையில் மொத்த பள்ளியின் பணி நாட்கள் 210 என அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து சனி மற்றும் ஞாயிறு நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
காலாண்டு தேர்வு எப்போது.?
மாணவர்களுக்கு செப்டம்பர் 18 முதல் 26ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது. தேர்வுக்கு பின்பு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் எதிர்பார்த்த விடுமுறை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கிடைக்கவில்லை. தினந்தோறும் காலண்டரை பார்த்து பார்த்து மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மாணவர்களுக்கு ஏமாற்றமான க ஜூன், ஜூலை ஏமாற்றமான மாதமாக அமைந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் கொத்து கொத்தாக விடுமுறை மாதமாக அமைந்துள்ளது.
ஆகஸ்ட் 8முதல் 10 வரை விடுமுறை
இதனால் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதுவும் 3 நாட்கள், 3 நாட்கள் என தொடர் விடுமுறையானது வரவுள்ளது. ஆகஸ்ட் 8,9 மற்றும் 10ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடப்படவுள்ளது. ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விரத தினங்களில் வரலட்சுமி விரதமும் ஒன்று.
இந்த தினத்தில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கையாகும். எனவே இந்த நாள் விஷேச நாட்களாக இருப்பதால் தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அரசு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படவுள்ளது.
3 நாள் தொடர் விடுமுறை
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி மாதத்தின் 2வது சனிக்கிழமை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாகும்,எனவே வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என 3 நாள் தொடர் விடுமுறையானது கிடைக்கவுள்ளது.
இதே போல அடுத்தவாரம் ஆகஸ்ட் 15, 16 மற்றும் 17ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு மட்டுமல்ல அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறையாகும். ஆகஸ்ட் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி
ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையாகும். அடுத்தாக ஆகஸ்ட் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாகும் எனவே தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை காரணமாக வெளியூர் பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் இந்த நாட்களில் திட்டமிடலாம்.
அடுத்ததாக ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆகஸ்ட் மாதம் மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் கொண்டாட்ட மாதமாக அமைந்துள்ளது.