ஒரே நாளில் பல்டி அடித்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? கதறும் இல்லத்தரசிகள்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலை ஒரே நாளில் 10 முதல் 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலை
சமையலுக்கு முக்கிய தேவை காய்கறிகளாகும் எனவே காய்கறி சந்தையில் எப்போதும் மக்களின் கூட்டம் அலைமோதும், காய்கறிகளின் விலையை பொறுத்து காய்கறிகளை அதிகளவு மக்கள் வாங்கி செல்வார்கள். அந்த வகையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,
முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?
காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் கேரட் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,
பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி விலை என்ன.?
எனவே ரசம், சாம்பார், பிரியாணி என எது சமைப்பதாக இருந்தாலும் தக்காளி வெங்காயத்தின் தேவை முக்கியமானது. எனவே காய்கறிகள் சந்தையில் அதிகளவு வெங்காயம் மற்றும் தக்காளியைத்தான் மக்கள் வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் தக்காளியின் விலையானது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல வெங்காயத்தின் விலையும் அதிகரித்தது. ஒரு கிலோ வெங்காயம் 120 ரூபாயை தாண்டியது. எனவே தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர்.
தக்காளி விலை அதிகரிப்பு
அடுத்த சில வாரங்களில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி, வெங்காயத்தின் விலையானது குறைந்து ஒரு கிலோ தக்காளி 10 ரூபாயை தொட்டது. இதே போல வெங்காயத்தின் விலையும் அதிரடியாக குறைந்தது. ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் உற்சாகத்தில் இருந்தனர். இந்த நிலையில் தக்காளியின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ தக்காளி கடந்த வாரம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ 65 ரூபாயை தாண்டியுள்ளது. ஒரே நாளில் ஒரு கிலோவிற்கு 10 முதல் 15 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் காய்கறி சந்தையில் குறைவான அளவிலேயே காய்கறிகளை மக்கள் வாங்கி செல்கிறார்கள்.