- Home
- விவசாயம்
- ஆண்டிற்கு 3% வட்டி சலுகை.! விவசாயிகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- குஷியான அறிவிப்பு
ஆண்டிற்கு 3% வட்டி சலுகை.! விவசாயிகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- குஷியான அறிவிப்பு
தமிழக விவசாயிகளுக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. 7 ஆண்டுகள் வரை 3% வட்டி சலுகையும், சொட்டுநீர் பாசனம், சூரிய சக்தி பம்புசெட்டுகள் போன்றவற்றுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கான அரசின் திட்டங்கள்
தமிழகத்தில் விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை வழங்கி வருகின்றன. விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், விவசாயத்தை ஊக்குவிக்கவும் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இரண்டு கட்டங்களாக இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ், சொட்டு நீர்ப்பாசன முறைக்கு 50% முதல் 100% வரை மானியம் வழங்கப்படுகிறது. மின்கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கப்படுகின்றன. 70% மானியமும், 30% விவசாயிகளின் பங்களிப்பும் வகையிலுல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாய உட்கட்டமைப்பு - 2 கோடி கடன் உதவி திட்டம்
இந்த நிலையில் வேளாண்மை - உழவர் நலத்துறை வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி (Agriculture Infrastructure Fund) வட்டி சலுகை திட்டம் விவசாயிகளுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. அந்த வகையில் ரூ. 2 கோடி வரை கடனுதவி வழங்கப்படும் இந்த திட்டத்தில் ஏழு ஆண்டுகள் வரை ஆண்டிற்கு 3% வட்டி சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் உதவி பெற தகுதியான திட்டங்கள்
குறைந்தபட்சம் நான்கு வேளாண் இயந்திரங்கள்/கருவிகள் அடங்கிய வேளாண் இயந்திர வாடகை மையம் அமைத்தல்.
நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற வேளாண்மை அறுவடை இயந்திரங்கள் வாங்குவதற்கு
ட்ரோன்கள், பூம் ஸ்பிரேயர்கள் (Boom Sprayers) உள்ளிட்ட ஸ்மார்ட் மற்றும் துல்லிய விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள் / கருவிகள் வாங்குவதற்கு
சிப்பம் கட்டுதல் / பேக்கிங் செய்தல், விளை பொருட்களை தரவகை படுத்துதல் உள்ளிட்ட அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை திட்டங்கள்.
சூரிய சக்தியால் இயங்கும் நீர் இறைக்கும் பம்புசெட்டுகள்
தகுதியான பயனாளிகள்:
விவசாயிகள், விவசாய தொழில்முனைவோர், தொடக்க நிறுவனங்கள், முதன்மை வேளாண் கடன் சங்கங்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் , சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், மத்திய மற்றும் மாநில அரசு ஆதரவு பொது-தனியார் கூட்டு திட்டங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகள்
திட்டத்தின் விவரங்களை http://agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம். மேலும் விவரங்களுக்கு: அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.