ஹோலி பண்டிகையை ஒட்டி அமேசானில் அண்மையில் ஆஃபர் விற்பனை நடந்து முடிந்த நிலையில், தற்போது மீண்டும் மெகா எலக்ட்ரானிக்ஸ் சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.

ஹோலி விற்பனைக்குப் பிறகு வரும் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் சேல் என்ற ஆஃபரை அமேசான் அறிவித்துள்ளது . இதில் லேப்டாப்கள், அணியக்கூடிய பொருட்கள், ஹெட்ஃபோன்கள், டேப்லெட்டுகள், கம்ப்யூட்டர் துணைக்கருவிகள், கேமராக்கள் என பல பொருட்கள் ஆஃபரில் வழங்கப்படுகின்றன. 

இந்த ஆஃபர் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 14, 2023 அன்று முடிவடைகிறது.. இந்த விற்பனையில் சாம்சங், ஆப்பிள், போட், ஃபயர்-போல்ட், லெனோவா, கேனான், சோனி என பல முன்னணி பிராண்டுகளின் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளை ஆஃபர் விலையில் பெறலாம்.

அமேசான் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் சலுகைகள்:

ஸ்மார்ட்வாட்ச்கள்:

  • 34,900 ரூபாய்க்கு ஆப்பிள் வாட்ச் எஸ்இ (ஜிபிஎஸ்+செல்லுயர்)
  • 1,699 ரூபாய்க்கு Fire-போல்ட் பீனிக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்
  • 1,699 ரூபாய்க்கு நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் கிராண்ட் ஸ்மார்ட்வாட்ச்
  • 1,599 ரூபாய்க்கு Fire-போல்ட் நிஞ்சா கால் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச்

ஆடியோ தயாரிப்புகள்:

  • போட் ஏர்டாப்ஸ் ஆட்டாம் 81 - ரூ.999
  • போட் அவேண்டே பார் 160W 2.1Ch சவுண்ட்பார் ஸ்பீக்கர் - ரூ. 7,499
  • போட் அவேண்டே பார் ஒரியான் 160W 2.1Ch சவுண்ட்பார் ஸ்பீக்கர் - ரூ.7,499 

டேப்லெட்கள்:

  • 17,918 ரூபாய்க்கு ரியல்மி பேட் ஸ்லீம்
  • 15,499 ரூபாய்க்கு சாம்சங் டேப் A8

டிஜிட்டல் கேமராக்கள்:

  • சோனி டிஜிட்டல் விலாக் கேமரா ZV 1 - ரூ.69,490
  • க்யூபோ கார் டேஷ் கேமரா ப்ரோ - ரூ.3,648

பிரிண்டர்கள்:

லேப்டாப்கள்:

  • அசுஸ் விவோ புக் 14 லேப்டாப் (இன்டல் கோர் i3 11th Gen) - ரூ. 34,990
  • லெனவோ ஐடியாபேட் ஸ்லீம் 3 லேப்டாப் (இன்டல் கோர் i3 11th Gen) ரூ.33,446
  • HP விக்டஸ் கேமிங் ரைசன் 5 (AMD ரைசன் 5 5600H + 4GB Radeon RX5500M கிராபிக்ஸ்)- ரூ. 53,990 (1000 ரூபாய் கூப்பன் உட்பட)

வங்கி சலுகைகள்:

வாடிக்கையாளர்கள் HDFC வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி 10% தள்ளுபடி பெறலாம். அதிகபட்சமாக ரூ. 1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் HDFC வங்கி, HSBC வங்கி மற்றும் யெஸ் வங்கி கார்டுகளுக்கும் சலுகைகள் உள்ளன.