ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் பெல்ஜியம் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அபார வெற்றி பெற்றது. 

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் க்ரூப் இ-யில் இடம்பெற்ற ஜப்பான் - கோஸ்டாரிகா அணிகள் மோதின. அந்த போட்டியில் கோஸ்டாரிகா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அடுத்த போட்டியில் க்ரூப் எஃப்-ல் இடம்பெற்ற பெல்ஜியம் மற்றும் மொராக்கோ அணிகள் மோதின. முதல் போட்டியில் கனடா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற பெல்ஜியம் அணி இன்று மொராக்கோவை எதிர்கொண்டது.

FIFA World Cup 2022: உலக கோப்பையில் மாரடோனாவின் சாதனையை சமன் செய்த லியோனல் மெஸ்ஸி

இந்த உலக கோப்பையின் ஆரம்பத்திலிருந்தே சிறிய அணிகள் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி தோல்விகளை பரிசளித்துவருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்திடம் அர்ஜெண்டினாவும், ஜப்பானிடம் ஜெர்மனியும் தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய பரபரப்பான போட்டியில் பெல்ஜியைத்தை மொராக்கோ அணி வீழ்த்தியது.

பெல்ஜியம் - மொராக்கோ அணிகள் மோதிய இந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. 2ம் பாதியில் இரு அணிகளுமே கோல் போட தீவிரமாக போராடிய நிலையில், ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அப்தெல்ஹமீத் முதல் கோலை அடிக்க, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஆட்டத்தின் 92வது நிமிடத்தில் ஜகாரியா 2வது கோலை அடித்தார்.

FIFA World Cup 2022: ஜப்பானை வீழ்த்தி கோஸ்டாரிகா வெற்றி..! புள்ளி பட்டியல் அப்டேட்

ஆனால் பெல்ஜியம் அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி மொராக்கோ அணி அபார வெற்றி பெற்றது.