Asianet News TamilAsianet News Tamil

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை: எந்தெந்த தேதிகளில் என்னென்ன போட்டிகள்..? முழு போட்டி விவரம்

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடரில் 32 அணிகள் 8 குழுக்களாக பிரிந்து ஆடும் நிலையில், முழு போட்டி அட்டவணையை பார்ப்போம்.
 

fifa world cup 2022 here is the complete schedule
Author
First Published Nov 2, 2022, 8:59 PM IST

ஃபிஃபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா.

கிரிக்கெட் உலக கோப்பையை விட சர்வதேச அளவில் பெரும்பாலானோரால் பார்க்கப்படுவது கால்பந்து உலக கோப்பை. 22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை கத்தாரில் நடக்கிறது. வரும் 20ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதித்த தடையை நீக்கியது ஃபிஃபா! U17 மகளிர் உலக கோப்பையை இந்தியாவில் நடத்தலாம்

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் முதல் முறையாக மத்திய ஆசிய நாடான கத்தாரில் நடக்கிறது. இந்த ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடருக்காக கடந்த 4 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட அணிகள் போட்டி போட்ட நிலையில், 32 அணிகள் மட்டுமே தகுதிபெற்றன. ஆஸ்திரேலியா, கோஸ்டாரிகா, வேல்ஸ் ஆகிய அணிகள் கடைசியாக தகுதிபெற்றன. 

32 அணிகளும் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவில் 4 அணிகள் என பிரித்து அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. 

குரூப் ஏ - கத்தார், ஈகுவடார், செனெகல், நெதர்லாந்து
குரூப் பி - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
குரூப் சி - அர்ஜெண்டினா, சௌதி அரேபியா, போலந்து, மெக்ஸிகோ
குரூப் டி - ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா
குரூப் இ - ஸ்பெயின், கோஸ்டாரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்
குரூப் எஃப் - கனடா, பெல்ஜியம், மொராக்கோ, குரோஷியா
குரூப் ஜி - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேம்ரூன்
குரூப் ஹெச் - போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை முழு போட்டி அட்டவணை:

நவம்பர் 21: கத்தார் - ஈகுவடார், செனெகல் - நெதர்லாந்து, இங்கிலாந்து, ஈரான்

நவம்பர் 22: யு.எஸ்.ஏ - வேல்ஸ், மெக்ஸிகோ - போலந்து, ஃப்ரான்ஸ் - ஆஸ்திரேலியா, டென்மார்க் - துனிசியா

நவம்பர் 23: அர்ஜெண்டினா - சவுதி அரேபியா, ஸ்பெய்ன் - கோஸ்டாரிகா, ஜெர்மனி - ஜப்பான், பெல்ஜியம் - கனடா

நவம்பர் 24 - மொராக்கோ - குரோஷியா, சுவிட்சர்லாந்து - கேமரூன், போர்ச்சுகல் - கானா, உருகுவே - தென்கொரியா

நவம்பர் 25: பிரேசில் - செர்பியா, இங்கிலாந்து - யு.எஸ்.ஏ, வேல்ஸ் - ஈரான், கத்தார் - செனெகல்

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்பே தொடக்கம்..! இதுதான் காரணம்

நவம்பர் 26: நெதர்லாந்து - ஈகுவடார், துனிசியா - ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா - மெக்ஸிகோ, போலந்து - சவுதி அரேபியா

நவம்பர் 27: ஃப்ரான்ஸ் - டென்மார்க், பெல்ஜியம் - மொராக்கோ, குரோஷியா - கனடா, ஸ்பெய்ன் - ஜெர்மனி

நவம்பர் 28: ஜப்பான் - கோஸ்டாரிக்கா, தென்கொரியா - கானா, பிரேசில் - சுவிட்சர்லாந்து, கேமரூன் - செர்பியா

நவம்பர் 29: போர்ச்சுகல் - உருகுவே, நெதர்லாந்து - கத்தார், ஈகுவடார் - செனெகல், வேல்ஸ் - இங்கிலாந்து

நவம்பர் 30: ஈரான் - யு.எஸ்.ஏ, சவுதி அரேபியா - மெக்ஸிகோ, துனிசியா - ஃப்ரான்ஸ், ஆஸ்திரேலியா - டென்மார்க்

டிசம்பர் 1: போலந்து - அர்ஜெண்டினா, ஜப்பான் - ஸ்பெய்ன், கோஸ்டாரிக்கா - ஜெர்மனி, குரோஷியா - பெல்ஜியம்

டிசம்பர் 2: கனடா - மொராக்கோ, செர்பியா - சுவிட்சர்லாந்து, தென்கொரியா-  போர்ச்சுகல், கானா - உருகுவே

டிசம்பர் 3: கேமரூன் - பெல்ஜியம்

அதன்பின்னர் காலிறுதிக்கு முந்தைய சுற்று டிசம்பர் 3லிருந்து டிசம்பர் 6 வரை நடக்கவுள்ளது. டிசம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் காலிறுதி போட்டிகளும், டிசம்பர் 14 மற்றும் 15ல் அரையிறுதி போட்டிகளும், டிசம்பர் 17ம் தேதி 3வது இடத்திற்கான போட்டியும் டிசம்பர் 18ம் தேதி இறுதிப்போட்டியும் நடக்கவுள்ளன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios