விஜய் டிவி தொலைக்காட்சியில், விறுவிறுப்பாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தற்போது "சூப்பர் சிங்கர் ஜூனியர்' சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய, கானா பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் பூவையார். குட்டி பாடகர் என்பதையும் தாண்டி, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும், 63 ஆவது படத்திலும்,  நடிகராக அறிமுகமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். 

இந்நிலையில் இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று, தன்னுடைய அம்மாவிற்கு பட்டு புடவை வாங்கி தர வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை, தனக்கு கிடைக்கும் பரிசு பணத்தில் முதலில் இதைத்தான் செய்வேன் என கூறியிருந்தார். 

இவரின் கனவை நிறைவேற்றும் வகையில், பூவையார் நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில், முதல் பரிசை பெற வில்லை என்றாலும், மூன்றாவது பரிசை பெற்றார். இதற்காக பூவையாருக்கு, 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதில் முதல் முதலாக அவருடைய அம்மாவிற்கு புடவை வாங்கி கொடுத்து, அவருடைய தாயை மகிழ்விக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

மேலும் தன்னுடைய வெற்றிக்கு காரணமாக அமைந்த அனைவர்க்கும், தன்னை ஊக்குவித்தவர்களுக்கும் பூவையார் கண்களில் கண்ணீரோடு மேடையில் நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.