அப்பா மகள் பாசம் காட்டி எப்போதுமே என்னை லாஸ்லியா நாமினேஷன் செய்ய மாட்டாள் என நம்பிக்கொண்டிருந்த சேரப்பாவுக்கு ரிவீட் அடித்துள்ளார் சிட்டி லாஸ்லியா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமல் ஹாசன் வீட்டின் போட்டியாளர்கள்களுடன் வழக்கம் போல கலந்துரையாடல் செய்தார், சகஜம் தான் என்றாலும் கூட, இந்த நிலையில் ஏற்கனவே கவினை பகிரங்கமாக எவிக்‌ஷனில் நாமினேசன் செய்தது அடுத்து, லாஸ்லியா - சேரன் இடையான அப்பா மகள் பாசம் விரிசல் ஏற்பட்டதால் நீண்ட நாட்களுக்கு பின் நேற்று கமல், சேரப்பா ! வேறப்பா ஆகிட்டாரா? என கேள்வி எழுப்பினார்.

சேரனின் அந்தர் பல்டியால் ஏமார்ந்து போன லாஸ்லியாவோடு சேரன் அழுது புரண்டு சேர்ந்துக் கொண்டார், இதனை அடுத்து இரவு பேசிக்கொண்டிருந்த கவின் சமயலறையில் சோகமாக இருக்க அப்போது வந்த லாஸ் ஏன் சோகமா இருக்க என கேட்க, இந்த நாடகத்தை என்னால் பார்க்க முடியாது என பதில் அளிக்க அப்படியே முடிந்தது நேற்றைய எபிசோட்.

இந்நிலையில், இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது. அதில், லாஸ்லியா நாமினேஷன் லிஸ்டில் சேரன் இடம்பிடித்துள்ளது, பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், இன்று காலை வந்த வெளியான புதிய புரொமோவில் சேரனை நாமினேட் செய்கிறார் லாஸ்லியா, இதற்கான காரணம் என அவர் சொல்வது கடைசி வாரம் நடந்த பிரச்சன்னையில் அவர் செய்தது மனதளவில் தாம் பாதித்ததாக சொல்லியுள்ளார்.  

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நான் எந்த நேரத்திலும் உங்களை நாமினேட் செய்ய மாட்டேன் என சேரனிடம் லாஸ்லியா கூறியுள்ளார், அதை அவரும் நம்பியுள்ளார். அதை திரும்பவும் அவர் கஸ்தூரியிடம் சொல்லிக்கொண்டே அப்பா மகள் பாசத்தை வைத்து தப்பிக்கலாம் என நினைத்தார். சேரப்பா, ஆனால் உங்க டிராமா எனக்கு தெரியும் என சொல்வதைப்போல நாமினேஷன் லிஸ்டில் கோர்த்துவிட்டுள்ளார் லாஸ், அதேபோல பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மொத்தபேரின் நாமினேஷன் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது சேரனும், கஸ்தூரி மட்டுமே இருக்கிறார்கள்.