இந்த சேரனுக்கு சனி ஞாயிறு வந்துட்டா போதும் மகள் சென்டிமென்ட்ட தூக்கிட்டு வந்துருவாரு. முதலில் மகள பத்தி புரணி பேசுரத நிப்பாட்டுப்பா... அந்த புள்ளகிட்ட நேரா பேசி க்ளியர் பண்ண தெரியல. வாரகடைசில பாசம் மட்டும் பொத்துகிட்டு வரும்! இப்படி பலரும் சேரனின் முகத்திரையை கிழித்து கந்தலாக்கி விட்டுள்ளனர். ஓவர் ஆக்டிங் ஜாங்கிரி மதுமிதா, தேவையில்லாமல் வாய் கொடுத்து இப்படி தற்கொலை டிராமா போட்டு தன்னை ஓவியா ரேஞ்சுக்கு மாற்ற முயற்சித்தார் . அவர் வெளியே வரும் முன்னே அவரின் பிராடுத்தனமும், அதற்கு உடந்தையாக இருந்த சேரனின் முகத்திரையும் கிழிந்துள்ளது.

மதுமிதா கேப்டனாக தேர்வானதற்கு நடந்த போட்டியில் ஃபிராடுதனம் செய்து ஜெயிச்சது தெரிந்த ஒன்று தான், ஆனால் சேரன் அதற்கு ஓவர் ஆட்டிடியூட் பார்வையாளர்களை எரிச்சலாக்கியது. இந்த டாஸ்க்கில் மூன்று பேரும் கண்களை கட்டிக்கொண்டு அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நிறத்தில், ஆங்கிலத்தில் "CAPTAIN"  என்ற வார்த்தையை சரியாக பொறுத்த வேண்டும். அதாவது கூடையில் கிடக்கும் தனித்தனி எழுத்துகளை சரியாக எடுத்து, போர்டில் பொருத்த வேண்டும். இந்த டாஸ்கில் ஆரம்பத்தில் இருந்தே மது சிறப்பாக விளையாடினார். ஷெரினும், தர்ஷனும் தடுமாறினர். மதுமிதாவுக்கு  ஆதரவாக சேரன் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். அதுபோல் மற்ற ஹவுஸ்மேட்சும் காட்டு கத்தல் கத்தினர். சிறப்பாக விளையாடிய மது போட்டியில் வெற்றி பெற்று கேப்டனாக தேர்வானார். சேரன் சொன்னதை காதில் வாங்கி தான் விளையாடியதால் வெற்றி பெற்றதாக மது புருடா விட்டார். மது கேப்டன் ஆனதில் அதிக மகிழ்ச்சி அடைந்து பூரிப்பில் சாப்பிடுவதாக சொன்ன சேரன், தானே கேப்டன் ஆனது போல் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

ஆனால் மதுமிதா கண்களை சரியாக கட்டாமல் ஓரக்கண்ணால் பார்த்து ஏமாற்றி விளையாடியது தெரியவந்தது குறித்து நிறைய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கோல்மால் பண்ணித்தான் மது கேப்டன் ஆனதாக விமர்சனம் எழுந்தது. அந்த வீடியோக்களில் பாக்ஸில் இருந்து வெளியே விழுந்த 'P' என்ற எழுத்தை மது சரியாக எப்படி எடுத்தார்?, அதேபோல் புளூ நிறத்தில் இருந்த 'C' எழுத்தை தவறுதலாக தர்ஷன் எடுக்க, அதை மதுமிதா எப்படி சரியாக பிடுங்கினார்?  மேலும், எந்த தங்குதடையும் இல்லாமல், கயிறை பிடிக்காமல் மதுமிதா இந்த விளையாட்டை விளையாடியதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. மற்றவர்கள் எல்லாம் தட்டுத்தடுமாறி தங்களது இடத்திற்கு சென்றனர்.

எழுத்துக்களையும் தடவி தடவியே அவர்கள் பொருத்தினர். ஆனால், மது அப்படி செய்யவில்லை.கடைசி எழுத்தான 'T' என்ற எழுத்தை எடுத்து போர்டில் அவர் சரியாக வைத்ததும் சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. எல்லோரும் காட்டு கத்தலாக கத்திக்கொண்டிருந்த போது சேரன் கூறியது எப்படி மதுவின் காதில் சரியாக விழுந்தது? இப்படியான பல கேள்விகள் மது பிராடுத்தனம் செய்து ஜெயித்தது சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.  

மது கம்முனு இருந்ததால தான் பசங்க வந்து அவங்கள தற்கொலை பண்ணிக்கோன்னு தூண்டினாங்களா? உண்மைய சொல்லுங்க டிராமா குயின்... உங்க டிராமா 2017 லேயே தெரியும். சென்னை வளசரவாக்கம் அன்பு நகர் 10வது தெருவில் வசித்து  வந்த மதுமிதா மீது அவர்  தங்கியிருக்கும், அடுக்குமாடி குடியிருப்பில் மெயின்டனன்ஸை பார்த்து வரும் உஷா கோயம்பேடு மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனில் மதுமிதா மீது புகார் அளித்ததிருந்தார்.

விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு வருமாறு போலீசார் மதுமிதாவை வீடு தேடி வந்து அழைக்க  இதனால் கோபம் அடைந்த மதுமிதா நேராக உஷாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே மதுமிதா உஷாவின் கையை பிடித்து கடித்து குதறி இருக்கிறார். மதுமிதா கடித்தவுடன் வலி தாங்க முடியாமல் உஷா அவரை பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதையடுத்து இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்துள்ளனர். இப்படி மதுமிதாவின் பழைய மேட்டரை கிளறினால் அவரின் சுயரூபம் தெரியவரும். ஒரே பில்ட்டிங்கில் இருக்கும் பக்கத்து வீட்டுக்கார பெண்ணையே கடித்து குதறிய மதுமிதா பிக் பாஸ் வீட்டில் என்ன அடாவடி செய்திருப்பார்? 

முதல் வாரத்திலேயே, கமல்ஹாசன் போட்டியாளர்கள் மத்தியில் உரையாடினார். இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் மதுமிதா - அபிராமி இடையே தமிழ்க் கலாச்சாரம் குறித்த பேச்சு இடம்பெற்றுள்ளது. அதில் மதுமிதா நான் ஒரு தமிழ் பொண்ணு, எங்க வீட்ல இதெல்லாக் ஏத்துக்க மாட்டாங்க. என்று கூற அதை கமல்ஹாசனிடம் முறையிட்டு கண்ணீர் வடித்தார் அபிராமி. இப்படி முதல் வாரத்திலேயே கலாச்சார மேட்டரை பேசி கலவரத்தை உண்டாக்கிவிட்டு நீலிக்கண்ணீர் வடித்து சீன போட்டு, தனக்கான ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.

இதேபோல கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு டாஸ்கில் மதுமிதா தனக்கு உடல்நிலை சரியில்லை என சொன்னபிறகும் 'மாரியம்மா.. மாரியம்மா' பாடலுக்கு ஹெவியாக ஆடவேண்டும் என சாண்டி வற்புறுத்தியதால் மதுமிதாவின் முகத்தில் பேஸ்ட் தடவி விட்டனர். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற மதுமிதா, சாண்டியை திட்டி தீர்த்துவிட்டார். கோபத்தின் உச்சத்துக்கே சென்று நீங்கல்லாம் ஆம்பளைங்களா? என கேட்டது அநாகரிகமாக கத்தியது அருவெறுப்பின் உச்சம்.

மதுமிதா டிராமா போட்டு வந்ததற்கு காரணம் யாரு? எப்படி ?

கடந்த வாரத்தின் நாமினேஷன் நாளும், பெஸ்ட் / வொர்ஸ்ட் பெர்ஃபார்மரைத் தேர்வு செய்யும் நாளும் தான். அப்போது, அந்த வாரத்தின் பெஸ்ட் பெர்ஃபார்மர்களாக மதுமிதா, ஷெரின், தர்ஷன் ஆகியோர் தேர்வாகினர். ஆனால், சேரன் முகத்தில் வருத்தம் அப்பட்டமாகவே பிரதிபலித்தது. அவரைப் பொறுத்தவரை இந்த வீட்டில் தான் ஒரு டைரக்டர் என்ற கெத்தோடு திகழ்கிறார். எல்லாரும் பாராட்டுகிறார்கள்.. மதிக்கிறார்கள்.. ஆனால் கேப்டன் பதவிக்கு ஆள் எடுக்கும்போது மட்டும் யாரும் கண்டுகொள்வதே இல்லை.  

அடுத்து மோசமான பெர்ஃபார்மர்கள், கஸ்தூரி பலராலும் மோசமான பெர்ஃபார்மராக முன்மொழியப்பட்டார். அடுத்து கவின் அடிக்கடி ஆங்கிலம் பேசிக்கொண்டிருக்கிறார் என அபிராமியை சொன்னார். பல நிமிடங்களுக்கு விவாதங்களுக்கு பின் ”சரி நானே ஜெயிலுக்குப் போறேன் என்றார் அபிராமி. மதுமிதா ஒரு வார்னிங் குடுக்கலாமே என்றார்.  

மேலும், அபிராமி ஜெயிலுக்கு அனுப்பப்படுவது தனக்கு உடன்பாடில்லை என்ற மதுமிதா ஆடியதெல்லாம் ஆணவ ஆட்டம். அநாகரீகத்தின் உச்சம்,“நான் அபிராமி மனசப் பார்க்கறேன்” என்றார். அப்போ உள்ளே புகுந்த சிட்டி லாஸ்லியா அப்ப நேத்து கேள்வியா கேட்டுக் கேட்டு அபிராமிய அழவெச்சப்ப அவ மனசு தெரியலயா உங்களுக்கு? என்றொரு கேள்வியைக் கேட்டார்.  போதாக்குறைக்கு கேப்டன்ஷிப் என்ற திராட்சை எட்டாத நரியாக அமர்ந்திருந்த சேரன் “ச்சே.. நாமினேஷன்ல வரக்கூடாதுனு கேப்டன்ஷிப்புக்கு அடிச்சுக்கறாங்க என. “நான் எல்லா வேலையும் செய்யறேன். என்னை யாரும் பெஸ்ட் பெர்ஃபார்மர்னு சொல்லலியே? என்று போனவாரப் பல்லவியையே திரும்பவும் பாடிக்கொண்டே வெண்டைக்காய் வெட்டிக்கொண்டிருந்தார்.

இதனையடுத்து தனக்கு இந்த வாரமும் தலைவர் பதவி கிடைக்காதே என்ற காண்டில் மதுமிதாவை தூண்டிவிட்டார் சேரன், நானும் கவினும் பேசறப்ப தர்ஷன் ஏன் நடுவுல வரணும்? இந்த வீட்ல ஆம்பளைங்க அடிமைத்தனம் பண்றீங்க. ஆம்பளைங்ககிட்ட நியாயம் இல்ல. நான் சொல்லுவேன். அடிச்சுச் சொல்லுவேன் என்றார். ரொம்ப வார்த்தை விடறீங்க என்றார் கவின். அப்போது கவின் மிகவும் தணிந்த குரலில் அவரது வாதத்தை எடுத்து வைத்துக்கொண்டே இருந்தது, ப்ரொஃபஷனலாகவும் கண்ணியமாகவும் இருந்தது. ஆனால் யார் சொல்லியும் மதுமிதா கேட்பதாக இல்லை பஜாரியாட்டம் ஆடினார். ‘நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்’ என்று சொன்னால்கூட ஓகே. ஆனால் மதுமிதா, ஓணானைப் பிடித்துக் கையில் வைத்துக்கொண்டு அது முயல் என்று வாதம் செய்து கொண்டிருந்தார்.  இதன் உச்சக்கட்டமாக கவினிடம் “உங்கள மாதிரி 4 பொண்ணுகளை யூஸ் பண்ணிகிட்டு இந்த வீட்ல இருக்கணும்கற அவசியம் எனக்கில்ல என கூவத்தின் நாற்றத்தைவிட வந்து விழுந்தது மது வாயிலிருந்து.

அதாவது கவின்  யூஸ் பண்ணாருன்னா? அந்த 4 பெண்களையும் தப்பா தான சொல்ல வரீங்க மது? அப்போது வனிதாவும் ஷெரினும் மதுமிதாவிடம் தங்கள் அதிருப்தியை வெளிக்காட்டினர். லாஸ்லியா அந்த நாலு பொண்ணுக மேட்டரை நீங்க கதைக்கவேண்டிய அவஷ்யம் இல்ல. அதுல நான் சம்பந்தப்பட்டிருக்கேன். இனி கதைக்காதீங்க என்று முகத்திலடித்த மாதிரி சொன்னார்.

ஆனால் இப்படி எதையுமே கண்டுக்கவே இல்லை தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு ஏமார்ந்துப்போன சேரன். கதைச்சா ஆட்டிடியூட், கதைக்காட்டி நடிக்குறா? கோபப்படாட்டி மிக்ஸர் சாப்பிடுறா, கோபப்பட்டா பஜாரியா?  மொத்தத்துல ஏதாவது சொல்லியேயாகனும் பொறாமை பிடிச்சாக்கள். சேரன் அவரே முதலில் ஒழுக்கம் இல்லை அவரு உத்தமன் மாதிரி நடிச்சிட்டு லாஸ்லியா ஏமாத்திட்டு இருக்காரு...

கடந்த இரண்டு வாரங்களாக லாஸ்லியாவுக்கு எதிராக காய் நகர்த்தி வந்த சேரன், லாஸ்லியா குறித்து மற்றவர்களிடம் பின்னாடி குறை பேசிவந்த சேரன், இன்று அவரை லாஸ்லியா நாமினேட் செய்யக் கூடாது என்பதற்காக நேற்று இரவு மீண்டும் ஒரு 'அப்பா' நாடகத்தை நடத்தினார். ஆனால் இந்த நாடகத்தில் மயங்காத லாஸ் இன்று சேரனை நாமினேட் செய்துள்ளார். சேரனால்தான் தான் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், ஒரு சில விஷயங்களில் அவர் தன்னை கண்டு கொள்ளவில்லை, தனக்கு எதிராக முடிவெடுத்தது, அதனால் அவரை நாமினேட் செய்வதாகவும் லாஸ்லியா தெரிவித்தார். லாஸ்லியா தன்னை நாமினேட் செய்ய மாட்டார் என்றும், எந்த காரணத்தை முன்னிட்டும் அவர் தனது பெயரை கூற மாட்டார் என்றும் கஸ்தூரியிடம் சேரன் மிகவும் நம்பிக்கையாக கூறினார். இந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் அப்பா-மகள் பாசத்திற்கு இங்கு இடமில்லை, போட்டியை போட்டியாகவே பார்க்கணும் என்று லாஸ்லியா எடுத்த நாமினேசன் முடிவு பாராட்ட வைத்துள்ளது.