பிக்பாங்ஸ் வீட்டில் மதுமிதா மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார், அந்த பெண்ணை விரட்டுவதிலேயே சக போட்டியாளர்கள் குறியாக இருந்தனர், அதனால் மக்கள் அவரை காப்பாற்றியதை அறிந்து கமல் ஹாஸன் முன்பு மதுமிதா கதறி அழுததை பார்த்த  போது, கொஞ்சம் கூட ஃபீல் இல்லை, செயற்கையாகவும் ஓவர் நடிப்பதாகவும் தான் இருந்தது.

வார இறுதி நாட்கள் வந்தாலே கமல் ஹாஸனை பார்க்க போட்டியாளர்களும், பார்வையாளர்களும் ஆவலுடன் இருப்பார்கள். பிக் பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸ் டீசண்ட்டாக உடையணிந்து, பவ்யமாக அமர்ந்து கொள்வதுமாக இருப்பார்கள்.   

வழக்கமாக திங்கள் நாமினேஷனில் கன்ஃபெஷன் அறைக்குள், ரகசியமாகத்தானே சொல்லியிருப்பார்கள் இங்கே ஓபனாக எல்லார் முன்னிலையிலும் சொல்லும் போது சண்டை இன்னும் அதிகமாகும் அதற்காகவே இந்த முறை இப்படியான விளையாட்டை தொடர்ந்தார் கமல்.

முதலில் உற்சாகமாக எழுந்த வனிதா, மதுமிதாவைக் குறிப்பிட்டார். எல்லாருக்குமாக அவரே நிறைய பெருக்கல் கடுப்பை கிளப்பியது. இது சில்றத்தனமாகத்தான் இருக்கு. சாண்டி, லாஸ்லியா, ஃபாத்திமா, கவின் ‘சரவணன் பாவம். அவரு கொழந்தைய மிஸ் பண்றாரு’ என சரவணனையே குறிப்பிட்டனர்.  எல்லாரும் சேஃபா சரவணனுக்குப் போடறீங்களா? என்று கேட்டார் வனிதா. சேரனும் அப்படிக் குறிப்பிடப்போன போது குறுக்கிட்டார் கமல்.  

அவங்களுக்கு நல்லதுனு சொல்லக்கூடாது. யார் போனா உங்களுக்கு அப்பாடானு இருக்கும்னு சொல்லணும் என்றதும். அதைக் கேட்ட வனிதா, துள்ளிக்குதித்துக்கொண்டு மொத்த மார்க்கையும் அழித்தார். சரவணனைக் குறிப்பிட்டவர்களும் மாற்றிக் குறிப்பிட்டனர். அபிராமி, மீராவைக் குறிப்பிட்டபோது, கன்ஃப்யூஸ் ஆகிட்டியா… மாத்தி சொல்றியா? என்று கேட்டார் வனிதா. மதுமிதா கவின் பெயரைச் சொல்லி அவர் செய்த செயல்களைக் குறிப்பிட்டபோது ஆடியன்ஸ் கைத்தட்டல்களை அள்ளியது.

எல்லாம் முடிய.. ஒருவர் தப்பித்திருக்கிறார். அவர் யாரென்று மட்டும் இன்று சொல்கிறேன் என்ற கமல், மக்களால் காப்பாற்றப்பட்டிருப்பவர் மதுமிதா!  என சொன்னதும் , கவின்,சாக்ஷி,வனிதா பலர் முகத்தில் ஈ ஆடவில்லை, அப்போது உடைந்து அழுதார் மதுமிதா. மதுமிதாவின் அழுகை தொடர்ந்தது.  மதுமிதா குமுறிக் குமுறி அழுதது, முட்டிபோட்டு அழுதது, சரவணன் மற்றும் பாத்திமாவை பார்த்த அழுதது சாரோஜா தேவி சிவாஜியிடம் கோபால் கோபால் என அழுவுவதைப்போல இருந்தது. கொஞ்சம் கூட பொருந்தாத செயற்கைத்தனமாக இருந்தது. கமல் நாளை பார்க்கலாம் என்று சொல்லிப் போன பிறகு, லாஸ்லியா வந்து கட்டிப்பிடித்த பிறகும், வனிதா இன்னொரு பக்கம் அபிராமியை கடுமையாக விமர்சித்தார். 

 மதுமிதா அழுதது செயற்கையாக இருந்ததாக சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் நினைக்கிறார்கள். கொஞ்சம் கூட ஃபீல் ஆகும்படியாக இல்லை மாறாக நெட்டிசன்ஸ் மீம்ஸ் போட்டு கலாய்க்கின்றனர். 

”உன்னாலதான பிரச்னை மதுகூட பிரச்னை ஆரம்பிச்சது அபிராமி. நீ எப்படி அவளை விட்டுட்டு மீராக்கு ஓட்டு போடலாம்?” என்று வனிதா கத்தினார். வெளியே கவின், சாக்‌ஷி, ஷெரின், அபிராமி, வனிதா எல்லாரும் பேசிக்கொண்டிருந்தார்கள். வனிதா எவ்வளவு பெரிய முட்டாள் என்பது தெரிந்தது. மதுமிதா – கவினைப் பற்றி சொன்ன கமெண்டுக்கு மக்களின் ஆரவாரம் கவினுக்கு ப்ளஸ் என்று குழப்பினார். சரவணன் ‘அப்படியெல்லாம் இல்ல’ என்றபோதும் “ஐ நோ… நான் சொல்றேன்ல” கவின் கலங்கித்தான் போனார்.