லாஸ்லியா, கடந்த சில நாட்களாக சேரப்பாவுடன் பேசுவதில்லை. அவர் ஏன் பேசவில்லை என்று காரணத்தையும் கேட்கவில்லை லாஸ்லியா, இதனை கூறிக்கூட ஷெரினிடம் புறம் பேசியுள்ளார் சேரப்பா (சேரன்).

லாஸ்லியா தற்போது சாண்டி அண்ட் கோ  (கவின், தர்ஷன், முகென்)வோடு பயங்கர தோழியாகிவிட்டார். அவர்கள் சேரப்பாவை மரண கலாய் கலாய்க்கும்போதும் கூட எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அவர்கள் கிண்டலடிப்பதை ரசித்து வருகிறார் லாஸ்லியா.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன் மதுமிதா டைட்டில் வின்னராக 100 சதவீத வாய்ப்பு இருப்பதாக சொல்லி வனிதா, மதுமிதாவின் பெயரை டோட்டலா டேமெஜ் செய்துவருகிறார். அவ்வப்போது தர்ஷனையும் கோர்த்து விட்டார். ஆனால் தர்ஷனோ சிக்காமல் நெத்தியடி பதிலை சொல்லிவிட்டு, ஓவரா நோஸ்கட் செய்துவிட்டு வருகிறார்.  சேரப்பா (சேரன்) தர்ஷனிடம் தனியாக பேசவேண்டுமென்று சொல்லி தனியாக அழைத்து பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது மௌன விரதத்தில் இருந்த ஜாங்கிரி மதுமிதா (புளிப்பு வித்த), ஆண்கள் தான் பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று மீண்டும் அதே பிரச்சனையை தர்ஷனிடம் பேச, நீங்க பழைய குப்பையை கெளறாதிங்க? நீங்க பாத்தீங்களா அந்த பொண்ணுங்க உங்ககிட்ட சொன்னார்களா? அவங்களே கூலா இருக்காங்க நீங்க என்னன்னா சாண்டி அண்ணனை, கைவினை டார்கெட் பண்ணி பேசுறீங்களே என ஜாங்கிரியை பிச்சு கடாசினார் தர்ஷன். பஞ்சாயத்து பண்ண சேரப்பாவுக்கும் பயங்கர நோஸ்கட் ஆனது. 

இந்த பேச்சைக்கேட்டு வந்த சாண்டி அண்ட் கோ லாஸ் மற்றும் கவின், இவ்ளோ நாள் சும்மாதானே இருந்தீங்க இப்போ என்னவாம் உங்களுக்கு பொண்ணுங்க மேல அவ்ளோ அக்கறை? கவின் ஆண்கள் பெண்களை பயன்படுத்தி கொள்கிறார்கள் என்றால் தர்ஷன் யாரை யூஸ் பண்றான் சேரன் யாரை யூஸ் பண்ணுகிறார்? என கேள்விகளை அடுக்குகிறார். நீங்களே இத்தனை நாட்களாக எதுவும் பேசவில்லை, வனிதா அக்கா வந்த பிறகுதான் பேசுகிறீர்கள் என்று மதுவை கூறுகிறார் கவின். இதைத்தொடர்ந்து மதுமிதாவுடன் மல்லுக்கட்டும் லாஸ், வனிதா அக்கா வந்து ஒரு வார்த்தை சொன்னவுடன் நீங்க பொங்கி எழுந்துட்டிங்க, இத்தனை நாள் என்ன வேற்று கிரகத்திலயா இருந்தீங்க? என்று கேட்டப்படி, நீயேல்லாம் ஒரு ஆளு!!! என கேவலமாக கையை காட்டிவிட்டு காண்டாக்கி விட்டு செல்கிறார் லாஸ்.

இந்த பிரச்சனையில் உள்ளே புகுந்த காக்கா (கஸ்தூரி) சாண்டி அண்ட் கோ வெச்ச பேரு,  கஸ்தூரி வாக்குவாதத்தில் நியாயம் தர்மம் என்னன்னு பேசிக்கொண்டிருந்தார் அப்போது,  அதை கண்ட கவின் 'உங்களிடம் பேசினால் எங்க அண்ணனுக்கு கேஸ் வாங்கி கொடுத்துருவீங்க' என்றபடி சாண்டியை தனியாக அழைத்து செல்கிறார். அப்போதும், விடாமல் பின்னாடியே ஓடிய கஸ்தூரியிடம். உங்களிடம் எங்களுக்கு பேச விருப்பம் இல்லை என்று கவின் சொல்ல, அப்போ நீங்க அந்த 4 பொண்ணுங்க கிட்டையும் பேசிருக்க கூடாது என்றார். இது கவினை பயங்கர எரிச்சலாக்கியது (நமக்கும் தான்) எத்தனவாட்டி அதையே கெளருவீங்க?. அந்த நான்கு பெண்களிடமும் அவர்களின் விருப்பத்துடனே பேசினேன். இதுக்கு மேல அதை பேசாதீங்க... சாவடிச்சிடுவேன் என்று கோவப்பட்டார் கவின்.

இந்த வாரத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த பிரச்னை பேசப்படுகிறது. இந்த பிரச்னையில் தான் செய்தது தவறு என்று சொல்லி கவின் மனிப்பு கேட்டு பல வாரங்கள் ஆனாலும், கவினுடன் ஏதாவது பிரச்னை வந்தா போதும், அனைவரின் வாதமும் இந்த நான்கு பெண்கள் என்ற பிரச்னைக்கே திரும்புகிறது. முதலில் வனிதா, அடுத்து மதுமிதா, தற்போது இப்போ கஸ்தூரி. ஒவ்வொரு முறை இந்த பிரச்னையை பற்றி பேசும்போதும் கவின் கோவத்தின் உச்சிக்கு சென்று விடுகிறார், 'வீட்டில் உள்ளவர்கள் இந்த பிரச்னையை திரும்ப திரும்ப பேசி கவினை டிரிகர் செய்கிறார்களா? என்ற சந்தேகம் வலுக்கிறது.

இது ஒருபக்கம் போக, சாண்டி அணியின் கலாய்யால் காண்டாகி காயப்பட்டு கிடக்கும் சேரப்பா  அவர்களோடு நெருக்கமாக ஒன்ற முடியாமல் குற்றவுணர்ச்சியில் தவிக்கிறார். ஆரம்பத்தில் லாஸ்லியாவிடம் தான் பேசி வந்தார். இருவரும் அப்பா, மகள் என்றே பேசிக்கொண்டனர். சேரனை லாஸ்லியா சேரப்பா சேரப்பா என்று செல்லமாக என அழைத்தது.அப்படி இருந்த அப்பா, மகள் உறவில் தற்போது பெரிய விரிசல் ஏற்பட்டது.

சேரனும், லாஸ்லியாவும் இப்போது பேசிக்கொள்வது இல்லை. இருவரும் எதிர் எதிரே வந்தாலும் குற்றவுணர்ச்சியால் நழுவி சென்றுவிடுகின்றனர். சேரனும் மதுமிதா உள்ளிட்டவர்களிடம் தனது வேதனையை கூறினார். பதிலுக்கு அவர்கள் லாஸ்லியாவை பற்றி குறை சொல்கிறார். ஆனா பாருங்க சேரன் அதை தடுப்பதில்லை. ஆதரித்தே பேசி வருகிறார்.தனக்கு மகள்கள் என்றால் மிகவும் பிடிக்கும் எனவும், லாஸ்லியாவை அப்படித்தான் நினைத்ததாகவும் சொல்கிறார்.

அதோடு, லாஸ்லியா இந்த வீட்டில் சேரப்பா என கூப்பிட்டு வந்ததால் தான், தனது வீட்டில் இருப்பது போன்றே பீல் பண்ணியதாகவும் புலம்பும் அவர், ஒருமைகளை இப்படி தப்ப பேசும் மதுமிதாவை கண்டிக்கவே இல்லை. ஆனால் லாஸ்லியாவோ சேரனோடு ஏன் மனக்கசப்பில் இருந்தாலும், அவரைப் பற்றி தேவையில்லாம எதுவும் பேசுவது இல்ல. பத்ரி ஸ்டைலில் வனிதாவை சாண்டி கலாய்த்த போதும் கூட, சேரனையும் கேலி செய்த சமயத்தில் குறிக்கிட்ட லாஸ்லியா, சேர்ப்பவை பற்றி கலாய்க்க வேண்டாம் என சாண்டியை தடுத்தார்.  

 

"லாஸ்லியா கொஞ்சம் ஓவரா பண்றதா சொன்னாலும், லாஸ்லியா சேரனை பற்றி பின்னால தப்பா பேசி பார்த்தீங்களா. அதேபோல இவங்க டீம்ல யாராவது சேர்ப்பவை கலாய்ச்சா, அவரை விட்டுடுங்கன்னு தான் சொல்லும் இந்த லாஸ். ஆனா சேரன், லாஸ் பற்றி மது, வனிதா, ஷெரீன்கிட்ட பின்னாடி பேசுகிறார். இது எல்லாமே மது கிரியேட் பண்ண விஷயம் தான்.

சேரப்பாவும், ஜாங்கிரி மதுமிதாவும் வனிதாவோடு சேர்ந்து தங்கள் மரியாதையை தாங்களே கெடுத்துக்கொள்கிறார்கள். ஏற்கனவே வெளியே சென்ற ஒரு நபர் சொல்வதை கேட்டு இவர்கள் ஆடுவதை என்னவென்று சொல்வது? என ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.