தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு இளம் வயதில் நடந்த பாலியல் பலாத்காரம் குறித்து மனம் திறந்துபேசி, பார்வையாளர்கள் அனைவரையும் கதிகலங்கவைத்தார் நடிகை வரலட்சுமி.

படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் போதும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் டாக் ஷோ ஒன்றை இந்த ஞாயிறு முதல் துவங்கியிருக்கிறார் வரலட்சுமி.

‘என்னை அறிந்தால்’ என்ற தலைப்பில் வெளியாகும் அந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் சமூகத்தில் நடைபெறும் அநீதிகள் குறித்து விவாதிக்கப்படுமென்று தெரிகிறது.

இன்று 12 மணிக்கு வெளியான அதன் முதல் எபிசோடில் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்ந்துவரும் பாலியல் பலாத்கர்ரம் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய பலரும் குற்றவாளிகளுக்கு கோர்ட் தீர்ப்பை விட தெருவில் நிற்கவைத்து தரும் தண்டனைகளே பயத்தைக்கொடுக்கும் என்று கருத்து தெரிவித்தார்கள். ஒருவர் சம்பந்தப்பட்ட நபர்களை நடுத்தெருவில் நிற்கவைத்து அவர்களது ஆண்குறியில் ஆசிட் அடிக்கவேண்டும் என்று உச்சக்கட்ட அதிர்ச்சி அளித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் தான் ஏன் இந்த நிகழ்ழ்சியை நடத்த ஒப்புக்கொண்டேன் என்று விளக்கமளித்த வரலட்சுமி, ‘ஏனென்றால் நானே பாலியல் தொல்லைக்கு ஆளான குழந்தைதான். என்னுடைய13 வயதில் ஒரு டிரைவர், இரண்டு மேனேஜர்கள், ஒரு செக்ரட்டரி மற்றும் ஒரு தாத்தாவில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டேன்’ என்று ஒரு பகீர் உண்மையை உடைத்து பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறையவைத்தார்.