பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் ஒட்டு மொத்த ரசிகர்களாலும் வெறுக்கப்பட்ட ஒரே நபர் ஐஸ்வர்யா தான். ஐஸ்வர்யா தமிழர்களை பற்றி மோசமாக பேசியது, சக போட்டியாளர்களிடம் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் நடந்துகொண்டது என ஆரம்பித்து, பாலாஜி தலையில் குப்பை கொட்டியது, என ஒவ்வொரு நடவடிக்கையாலும் சக போட்டியாளர்களின் வெறுப்பையும் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். இது எல்லோரும் அறிந்தது தான்.


ஆனால் இவ்வளவு தூரம் மக்கள் வெறுக்கும் ஐஸ்வர்யா இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறாமல் இருப்பது தான் பிக் பாஸ் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை அளித்திருக்கிறது. இதற்கு பிக் பாஸ் தான் காரணம். 

அவர் தான் வேண்டுமென்றே ஐஸ்வர்யாவை பிக் பாஸ் வீட்டினுள்  தக்க வைக்கிறார் என்று பிக் பாஸ் மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்தனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

அதிலும் ஐஸ்வர்யா ஒருமுறை எவிக்ஷனுக்கு வந்த போது கண்டிப்பாக அவர் தான் எலிமினேட் ஆவார் என எதிர்பார்த்த மக்களிடம், ஐஸ்வர்யா தான் இம்முறை அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார் என அதிர்ச்சி தரும் புள்ளி விவரம் ஒன்றை காட்டியது பிக் பாஸ் குழு. 

இதனால் பிக் பாஸ் ஒட்டிங் மீதே நம்பிக்கை இல்லாமல் போனது மக்களுக்கு. ஆனால் இந்த ஓட்டிங் விஷயத்தில் பிக் பாஸ் குழு சொன்னது உண்மை தான் என தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால் ஐஸ்வராவிற்கு கிடைத்த ஓட்டுக்கள் அத்தனையும் தமிழர்களின் ஓட்டு இல்லையாம். மும்பையில் இருந்து அவருக்கு ஒட்டுக்கள் வந்திருக்கிறதாம். அதனால் தான் அவர் ஓட்டிங்கில் எப்போதும் முன்னிலையில் இருக்கிறாராம்.