பிரியா ஜெர்சன் பைனலில் அவர் இடம்பிடித்தும் அவருக்குத்தான் வெற்றி என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால்,  அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அமோக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றுடன் முடிவுக்கு வந்தது. நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் விதவிதமான பாடல்களைப் பாடி இசை விருந்து அளித்தனர்.

பல கடினமான பாடல்களையும் தன் ஸ்டைலின் பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வந்த பிரியா ஜெர்சன் தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிவிட்டார். பைனலில் அவர் இடம்பிடித்தும் அவருக்குத்தான் வெற்றி என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், டைட்டிலை ஜஸ்டு மிஸ் செய்த அவருக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

இறுதிச்சுற்றில் அவர் பாடிய இரண்டு பாடல்களும் நடுவர்களின் மனதைக் கொள்ளை கொண்டன. பாராட்டு மழையில் நனைந்து கண்கலங்கி நின்றார். அவருக்கு ஹாரிஸ் ஜெயராஜ் ரூ.10 லட்சம் பரிசு வழங்கி பாராட்டினார். பிரியாவை முந்தி முதல் இடத்தைப் பிடித்தார் அருணா.

சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதல் முறையாக பட்டம் வென்ற பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது. மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பவர் பிரசன்னா. அவருக்கு ரூ.5 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.

Scroll to load tweet…

அபிஜித், அருணா, பூஜா, பிரியா, பிரசன்னா ஆகிய ஐந்து பேர் வெற்றிக்காகப் போட்டியிட்டார்கள். சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 3 மணி முதல் சூப்பர் சிங்கர் சீசன் 9 பைனல் சற்று நேரலையாக நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி விஜய் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.