தமிழ் திரையுலகில் சில காலம் விலகி இருந்த மும்தாஜ் மீண்டும் திரையுலகிற்கு ரீ எண்ட்ரி கொடுப்பதற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஒரு கவர்ச்சி நடியைகாக திரையுலகில் ரசிகர்களை சம்பாதித்திருந்த மும்தாஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் , யதார்த்தமான மும்தாஜாக அதிக அளவிலான ரசிகர்களை தற்போது சம்பாதித்திருக்கிறார். 

பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அவரின் ஒவ்வொரு செயல்களையுமே பாராட்டி இருக்கின்றனர் அவரின் ரசிகர்கள்.
குறிப்பிட்ட விஷயங்களில் அதிகம் பிடிவாதம் காட்டுவது மட்டுமே இவரிடம் எதிர்மறையான விஷயமாக மக்களால் பார்க்கப்பட்டது. இந்த வாரம் இவர் எலிமினேட் ஆனதற்கு கூட இது தான் காரணம் என்றும் சொல்லலாம். 

பிறரிடம் அன்பாக பழகும் மும்தாஜ் ரித்விகாவிற்காக தனது முடியை பச்சை நிறத்தில் கலர் செய்து கொள்ள முடியாது என  மறுப்பு தெரிவித்துவிட்டார். அதை தாண்டி பிக் பாஸ் வீட்டில் தான் எடுத்த முடிவில் உறுதியாக நிற்பது. கஷ்டத்தில் இருப்பவரிடம் ஆதரவாக பேசுவது என ஒரு தைரியமன பெண்ணாக தான் மும்தாஜ் இருந்திருக்கிறார்.

இதனை முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ஹாரதி தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ”மும்தாஜ் ஒரு நேர்மையான அன்பான தைரியமான போட்டியாளர். அவருடைய வருங்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என தெரிவித்திருக்கும் ஹாரதி, இன்னொரு ட்வீட்டில் மும்தாஜுக்கு நடந்த எலிமினேஷனை விமர்சித்திருக்கிறார்.

“எலிமினேஷனுக்கு இதெல்லாம் ஒரு காரணமா? முதல் நாளில் இருந்து இப்போ வரை சிங்கம் மாதிரி கெத்தா இருந்தார் மும்தாஜ். எல்லாத்துக்கும் கைதட்டுற ஆடியன்ஸ் நடிப்பு பிரமாதம். மும்தாஜ் மக்கள் மனசை ஜெயிச்சிருக்காங்க. அவங்க ரசிகைனு சொல்லிக்க பெருமை படுறேன்” என தெரிவித்திருக்கிறார் ஹாரதி.