தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசாரை அவதுாறாக பேசி பிரபலமானவர் 'டிவி' நடிகை நிலானி. இவரும்  திருவண்ணாமலையை சேர்ந்த உதவி இயக்குநரான காந்தி லலித் குமாரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்ய இருந்த நிலையில்  திடீரென நிலானி மறுத்ததாக தெரிகிறது.

லலித்குமார், நிலானிக்கு டார்ச்சர் கொடுத்ததாவும் தெரிகிறது. இதனை அடுத்து, லலித் குமார் மீது, நிலானி போலீசில் புகார் அளித்தார். இதனால் மனமுடைந்த லலித்குமார் சில நாட்களுக்கு முன்னர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

லலித்குமாரின் தற்கொலைக்கு நடிகை நிலானிதான் காரணம் என்று அவரது சகோதரர் குற்றம் சாட்டியிருந்தார். நிலானியோ, லலித்குமார் மீது பல்வேறு புகார்களை கூறி வந்தார். காந்தி லலித்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை என்றும், லலித்குமார் பல பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் புகார் கூறியிருந்தார்.

"

மன உளைச்சலுக்கு ஆளான நிலானி நேற்று முன்தினம், கொசு மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை, போலீசாரின் உதவியோடு மீட்ட அக்கம் பக்கத்தினர், மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நிலானி மீது தற்கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ்  மதுரவாயல் போலீஸ்  வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் நடிகை நிலானி விரைவில் காதாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.