எப்போதும் அடி தடி சண்டை என களேபரமாக இருக்கும் பிக் பாஸ் வீடு கடந்த் ஒரு வாரமாக , விக்ரமன் படத்தில் வருவது போல ஆனந்தமாக இருக்கிறது. எலிமினேட் ஆன போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவதும், மற்ற போட்டியாளர்கள் அவர்களை கட்டிப்பிடித்து வரவேற்பதும் என ஆனந்த கண்ணீரில் மூழ்கி இருக்கிறது பிக் பாஸ் வீடு. 

இந்த பாசப்போராட்டத்தை சகித்துக்கொள்ள முடியாமல் பாதியிலேயே தூங்கி வழிகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். இதில் நாளை பிக் பாஸின்  கிளைமேக்ஸ் வேறு. ஆனால் அந்த பரபரப்பே இல்லாமல் வயலின் வாசித்துக்கொண்டிருக்கிறார் பிக் பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் போது இப்படி எல்லாம் இருக்கவில்லை. 

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடையுவதற்கு முந்தைய நாள் வரை ஒவ்வொரு டாஸ்காக மாற்றி மாற்றி கொடுத்துக்கொண்டிருந்தார் பிக் பாஸ். ஆனால் இந்த முறை அப்படியே உல்டாவாகிவிட்டது. இதனை பார்த்து கடுப்பான முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ஹாரதி , இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி நக்கலான ட்வீட் ஒன்றை போடிருக்கிறார்.

அதில்”என்ன பிக் பாஸ் நீங்க ஒட்டு போடுறதுல பிஸி ஆகிட்டிங்க போல? ஒரு டாஸ்கும் கொடுக்கல எதுவும் நடக்கல. டான்ஸ் போட்டு ,சாப்பாடு போட்டு இந்த வாரத்தை அப்படியே ஒட்டிட்டீங்க? இந்த பிக் பாஸ் வீட்டுல எத்தனை நாள் வேணும்னாலும் இருக்கலாம் . சொகுசு போங்க” என நக்கலாக தெரிவித்திருக்கிறார் ஹாரதி.

சீசன் 1ல் பிக் பாஸ் ,பிக் பாஸ் ,என கடவுளிடம் பேசுவது போல மரியாதையாக பேசிய ஹாரதி , இப்போது பிக் பாஸையே கேலி செய்யும் அளவிற்கு டெவலப் ஆகி இருக்கிறார். எல்லாம் ஐஸ்வர்யாவுக்கு பிக் பாஸ் காட்டிய ஓர வஞ்சனையால் வந்த வினை.