பாஸ் நிகழ்ச்சியில் சென்றாயனின் எலிமினேஷன் ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் என யாருமே எதிர்பார்க்காததாக அமைந்திருக்கிறது. பிக் பாஸின் இரண்டாவது சீசனில் நிகழ்ந்திருக்கும் எலிமினேஷனில் பெரும்பாலானவை மக்களின் விருப்பத்துக்கு மாறானதாக தான் இருந்து வருகிறது. 

இந்நிலையில் கடந்த வார நிகழ்வுகளை மறக்கடிக்கவும், புதிய திருப்பங்களை உருவாக்கிடவும் , பிக் பாஸ் முதல் சீசன்  போட்டியாளர்கள் 5 பேரை வீட்டினுள் அனுப்பி வைத்திருக்கிறது பிக் பாஸ் குழு. சினேகன், காயத்திரி, சுஜா, ஹாரதி, வையாபுரி என ஐந்து பேருமே கொஞ்சம் விவகாரமான போட்டியாளர்கள் தான். 

இவர்களின் வருகையால் இந்த வாரம் பிக் பாஸ் களைகட்டும் என்றே எதிர்பார்க்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். அதற்கு ஏற்ப பிக் பாஸ் வீட்டினுள் வந்த முதல் நாளே பிரச்சனையை ஆரம்பித்திருக்கிறார் சினேகன். பிக் பாஸ் வீட்ட்ற்கு தேவையான உணவு பொருட்களை தேர்வு செய்யும் போது , பால் தயிர் போன்ற பொருட்களை அதிகம் தேர்வு செய்திருக்கின்றனர் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்கள். 

இந்த பால் பொருள்கள் எதுவும் மும்தாஜுக்கு ஒத்துக்கொள்ளாது என அறிந்தே தான் இதை செய்திருக்கின்றனர். இதுகுறித்து பேசும் போது ”இந்த ஒரு வாரத்திற்காவது வீட்டில் அனைவரின் விருப்பப்படியும் சமமாக சில விஷயங்கள் நடக்கட்டும், என தான் இப்படி செய்திருக்கிறோம். இதற்கு உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு வேண்டும் என பிக் பாஸ் ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார் சினேகன்.

அதே சமயம் மும்தாஜ் ஒரு பக்கம் எனக்கு உடம்பு சரி இல்லாம போனா பிக் பாஸ் என்ன இந்த வீட்டை விட்டு அனுப்பிடுவாரு, பாத்துக்கலாம் என அவர் போக்கிற்கு பேசுகிறார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் இப்போது வரை தன் உடல் நிலை குறித்து மட்டும் தான் மும்தாஜ் அக்கறை கொள்கிறார். அவ்வளவு தூரம் மோசமான உடல் நிலையை வைத்துக்கொண்டு பிக் பாஸில் அவர் ஏன் கலந்து கொண்டார் என்று தான் தெரியவில்லை.