Asianet News TamilAsianet News Tamil

பாலாஜிக்கு மொட்டை அடித்த மும்தாஜ்; கண் கலங்கிய போட்டியாளர்கள்!

கடந்த ஒரு வாரமாக செண்டிமெண்டாக ஓடிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில், டேனி பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கிறார். இத்தனை நாள் பிக் பாஸின் கரங்களுக்குள் தப்பித்த வந்த ஐஸ்வர்யாவை, தற்போது கட்டம் கட்டி தாக்கி வருகின்றனர் சக போட்டியாளர்கள்.

BigBoss 2...Balaji Shaved Mumtaz
Author
Chennai, First Published Sep 4, 2018, 1:34 PM IST

கடந்த ஒரு வாரமாக செண்டிமெண்டாக ஓடிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில், டேனி பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கிறார். இத்தனை நாள் பிக் பாஸின் கரங்களுக்குள் தப்பித்த வந்த ஐஸ்வர்யாவை, தற்போது கட்டம் கட்டி தாக்கி வருகின்றனர் சக போட்டியாளர்கள். அதிலும் நேற்றைய நிகழ்ச்சியின் போது ஐஸ்வர்யாவிடம், தமிழ்நாட்டும் மக்கள் ஒன்னும் முட்டாள் கிடையாது. என காட்டமாக பேசிய விஜயலஷ்மி, மக்கள் மனதில் ஐஸ்வர்யாவிற்கான இடம் என்ன என்பதை அவரிடம் உணர்த்தி இருக்கிறார். BigBoss 2...Balaji Shaved Mumtaz

மேலும் எல்லா டாஸ்கிலும் நீ இது வரை ஜெயிச்சுருக்க. மக்கள் முன்னாடி ஒரு முறை நின்னு பாரு. என இம்முறை எவிக்ஷன் லிஸ்டில் ஐஸ்வர்யாவை நிற்க வைத்திருக்கின்றனர் போட்டியாளர்கள். இதனிடையே இன்றைய பிரமோவில் ஜனனி தன்னை காப்பாற்றி கொள்ள பிக் பாஸ்வீட்டில் இருக்கும் சக போட்டியாளர் ஒருவரை , அவர் சம்மதத்துடன் மொட்டை அடித்து கொள்ள வைக்க வேண்டும் என கூறி இருக்கிறார் பிக் பாஸ். ஜனனி என்ன நினைத்தாரோ தெரியவில்லை , பாலாஜியிடம் போய் தன்னை காப்பாற்றி கொள்ள மொட்டையடித்து கொள்வீர்களா? என கேட்டிருக்கிறார்.

நன்கு யோசித்த பிறகு பாலாஜியும் என் மகள காப்பாத்த இத செய்ய மாட்டேனா? நான் மொட்டை அடித்து கொள்ள சம்மதிக்கிறேன் பிக் பாஸ். என சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனால் நெகிழ்ந்து போன ஜனனியும், விஜயலஷ்மியும் அவரை கட்டி தழுவி கண்ணீர் விட்டிருக்கின்றனர். மொட்டை அடித்த பிறகு பாலாஜியும் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். ஜனனியின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வந்த போது பாலாஜியிடம் ஜாக்கிரதையாக இருக்கும் படி கூறி இருந்தார். BigBoss 2...Balaji Shaved Mumtaz

ஆனால் இந்த பாலாஜியால் தான் இப்போது ஜனனி பிக் பாஸ் வீட்டில் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
பாலாஜி செய்திருக்கும் இந்த விஷயம் அங்கு இருந்த அனைத்து போட்டியாளர்களையுமே ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. தமிழர் மரபில் மொட்டையடித்து கொள்வது என்பது பல உள்ளர்த்தங்கள் கொண்ட விஷயம். இதில் பிக் பாஸ் எந்த அர்த்தத்தில் கேட்டிருக்கிறார் என்று பார்க்கும் போது, ஜனனியை காப்பாற்ற பாலாஜி மொட்டை போட்டு கொண்டதால், பாலாஜி ஜனனிக்காக பிக் பாஸுக்கு செலுத்தி இருக்கும் காணிக்கை என்ற வகையில் கூட இதனை எடுத்து கொள்ளலாம். இதில் மும்தாஜ் தான் பாலாஜிக்கு மொட்டை அடித்து விட்டிருக்கிறார் . சுற்றி நின்று அதை பார்க்கும் சக போட்டியாளர்கள் கண்கலங்கி இருக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios