பிக்பாஸில் கலக்க வந்த திருநங்கை நமீதா... யார் இவர்…? அசர வைக்கும் பயோடேட்டா…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள திருநங்கை நமீதாவின் பயோ டேட்டா அனைவரையும் அசத்தி உள்ளது.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள திருநங்கை நமீதாவின் பயோ டேட்டா அனைவரையும் அசத்தி உள்ளது.
தமிழகம் மட்டுமல்ல, உலக தொலைக்காட்சி நேயர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த பிக்பாஸ் சீசன் 5 இன்று தொடங்கி உள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக ஆரம்பித்துள்ள இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி இருப்பவர் திருநங்கை நமீதா மாரிமுத்து.
தமிழ் பிக்பாஸ் சீசனில் முதன்முதலில் பங்கேற்றுள்ள திருநங்கை போட்டியாளர் என்ற பெருமையை அவர் இதன் மூலம் பெற்றிருக்கிறார். நேயர்களுக்கு புதிய முகமான இவரின் பயோடேட்டா ஆச்சரியம் தருகிறது.
சென்னையை சேர்ந்தவர், மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 2014ம் ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் வெற்றி பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். அதன்பிறகும் அவரது வெற்றிநடை நிற்கவில்லை.
2015ம் ஆண்டின் மிஸ் கூவாகம், 2018ம் ஆண்டில் மிஸ் இந்தியா என ஒரு கலக்கு கலக்கினார். ஸ்பெயினில் சர்வதேச திருநங்கை உலக போட்டியில் இந்திய போட்டியாளராக பங்கேற்று அசத்தியவர்.
நீல நிற உடையில் சிக்கென்று நமீதா மாரிமுத்து பிக்பாசிஸ் என்ட்ரியாகி இருக்கிறார். இப்போது இருக்கும் போட்டியாளர்களில் இவர்தான் மிக உயரமானவர். நாடோடிகள் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முத்திரை பதித்த நமீதா, கொரோனா காலத்தில் ஏழை மக்களின் பசியை போக்கியவர்.
பல்வேறு சாதனைகள், சமூக சிந்தனை என கலவையாக போட்டியாளராக உள்ளே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். இதுவரை நடந்து முடிந்த மற்ற பிக்பாஸ் சீசன் போன்று இல்லாமல் முற்றிலும் மிக வித்தியாசமாக இது இருக்க போகிறது என்று நமீதாவின் என்ட்ரியை வைத்து இப்போது பார்வையாளர்கள் இணையத்தை ரவுண்டு கட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆக மொத்தத்தில் பிக் பாஸ் சீசன் 5… சபாஷ் சரியான போட்டி என்றே சொல்லலாம்….!