கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 64 நாட்களை எட்டிவிட்டது. ஒவ்வொரு வாரமும் சிலரின் பெயர் மற்றவர்களால் எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்படுகிறது. கடந்த வாரம் சென்றாயன் வெளியேறினார். ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் மும்தாஜ்,  ஜனனி, ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எவிக்சன் பட்டியலில் இருக்கின்றனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன்  இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பு இல்லாமல் சென்று கொண்டிருந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதியாக கொடுக்கப்பட்ட டாஸ்கால் மற்றும் பிக் பாஸ் சீசன் 1 ல் இடம்பிடித்த போட்டியாளர்கள் வந்துள்ளதால் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வந்த தகவலின்படி ஐஸ்வர்யா குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதால் அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் பிக்பாஸ் படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த தகவலின்படி செண்ட்ராயன் வெளியேறிவிட்டதாக தெரிகிறது. இது அனைவருக்கும் எதிர்பாராத திருப்பமாக கருதப்படுகிறது. பிக்பாஸ் டைட்டில் வின்னராக செண்ட்ராயன் வருவதற்கு வாய்ப்பு இருந்த நிலையில் திடீரென செண்ட்ராயன் வெளியேறியதற்கு ஒருசில காரணங்களும் கூறப்படுகிறது.

இந்த வார டாஸ்க்கில் பார்வையாளர்கள் அதிகம் வெறுத்த ஐஸ்வர்யாவை, ‘கண்ணே மணியே, தங்கமே என்று செண்ட்ராயன் கொஞ்சியதை யாரும் ரசிக்கவில்லை. அதனால் கூட அவருக்கு விழ வேண்டிய கணிசமான ஓட்டுக்கள் குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வருடம் போட்டியாளர்களாகப் பங்கேற்ற சினேகன், காயத்ரி ரகுராம், வையாபுரி, சுஜா வருணி, ஹார்த்தி ஆகிய 5 பேரும் ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் சென்றுள்ளனர். அவர்களைப் பார்த்ததும் தற்போதிருக்கும் போட்டியாளர்களுக்கு அவ்வளவு சந்தோஷம். மகிழ்ச்சியுடன் கட்டித்தழுவி அவர்களை வரவேற்றனர். ஐஸ்வர்யா தத்தாவை கன்னத்தை வருடி நெட்டி முறித்த ஹார்த்தி, ‘தமிழ்நாட்டின் திருமகளே… ‘பிக் பாஸ்’ வீட்டின் மருமகளே…’ என்று சொல்ல, ஐஸ்வர்யா முகத்தில் அவ்வளவு வெட்கம். 

இதில் இந்த வாரம் மும்தாஜ், ஐஸ்வர்யா ஆகியோரின் பெயர் எவிக்‌ஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.  ஆனால் பிக்பாஸ் கட்டளையின் படி தலைவராக இருக்கும் யாஷிகா யாரையாவது காப்பாற்றலாம் என சொல்லப்பட்டதால், அவர் தன் தோழி ஐஸ்வர்யாவை காப்பாற்றப்படும் பட்சத்தில் மும்தாஜ் இந்தவாரம் வெளிஏற்றப்பட உள்ளார். ஜனனி, ரித்விகா, யாஷிகா, ஐஸ்வர்யா, பாலாஜி,  விஜயலட்சுமி ஆகிய 6 பேரும் போட்டியாளர்களாகக் களத்தில் நிற்கின்றனர்.