பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக, போட்டியாளர்களுக்கு ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு முறை இந்த டாஸ்க் அறிவிக்கும் போதும் பிக்பாஸ் போட்டியாளர்கள் வீட்டில் இருந்து அவர்களுடைய உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து, சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

இந்த சந்தோஷத்தால் அனைத்து போட்டியாளர்களும், தங்களுடைய மனதில் இருந்த கோப தாபங்களை மறந்து மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். இந்த டாஸ்க் தற்போது முடிவடைந்து விட்ட நிலையில் மீண்டும் பிரச்சனை வெடிக்க துவங்கியுள்ளது.

குறிப்பாக, தற்போது தாடி பாலாஜி திருந்தி விட்டார் என அவருடைய மனைவி நித்யா மீண்டும் இவருடன் வாழ முன்வந்துள்ள நிலையில். பாலாஜி பின்னால் சென்று மற்ற போட்டியாளர்கள் பற்றி விமர்சிக்கும் விதமாக பேசியுள்ளதை ரசிகர்கள் சிலர் 'எவ்வளவு பட்டும் பாலாஜி திருந்தவே மாட்டாரா..? கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்... "பாலாஜி சரி மாப்பிள்ளை என்பதால் தான் நான் சும்மா இருப்பதாக கூறுகிறார். நேற்று, அதற்கு முன் நாள் குடும்பத்தினர் பற்றி பேசி வந்த இவர்கள் தற்போது திரும்பவும் ஆரம்பித்து விட்டதாகவும், தற்போது இங்கு 6 மஹத்  இருப்பதாக டேனி மற்றும் சென்றாயனிடம் கூறுகிறார் பாலாஜி.  தான் மும்தாஜையும் சேர்த்து தான் சொல்வதாக அழுத்தி கூறுகிறார். 

கடந்த சில தினங்களாக மற்றவர்கள் பற்றி புறம் பேசாமல் இருந்த, தாடி பாலாஜி மனைவி நித்யா அவரை நெருங்கி வரும் நேரத்தில் இப்படி நடந்து கொள்வது இன்னும் பாலாஜி திருந்தாதையே காட்டுகிறது என்பதே பலரது கருத்தாக உள்ளது.