இன்னும் இரண்டே வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருக்கிறது. இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருப்பதால் பிக் பாஸ் விட்டில் போட்டியும் கடுமையாகி கொண்டே இருக்கிறது. அதிலும் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டினுள் நுழைந்திருக்கும் விஜயலஷ்மி , பிக் பாஸின் செல்ல பிள்ளையான ஐஸ்வர்யாவை படாதபாடு படுத்திக்கொண்டிருக்கிறார். 

டாஸ்க் என்று வந்துவிட்டால் புலியாக மாறிவிடும் ஐஸ்வர்யாவையே பல முறை கலங்கடித்திருக்கிறார் விஜயலஷ்மி.
போன வாரம் வரை மும்தாஜை டார்கெட் செய்த இவர் இம்முறை டார்கெட் செய்திருப்பது ஐஸ்வர்யாவை தான். அதனாலேயே தனது மூளையை கசக்கி பிழிந்து ஐஸ்வர்யாவை டாஸ்க் செய்யவிடாமல் தடுக்கா திட்டமெல்லாம் தீட்டி இருக்கிறார் விஜயலஷ்மி. 

அதே சமயம் இம்முறை பிக் பாஸ்     எவிக்ஷன் லிஸ்டில் இவர் பெயரும் இருக்கிறது. இதனால் விஜயலஷ்மிக்காக ஒட்டு கேட்டு வருகிறார் அஜீத் பட இயக்குனர் ஒருவர். 

தல அஜீத் நடிப்பில் காதல் கோட்டை திரைப்படத்தினை யாராலும் மறந்திருக்க முடியாது. அவரின் திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் காதல் கோட்டையும் ஒன்று. அந்த படத்தின் இயக்குனர் அகத்தியன் தான் விஜயலஷ்மிக்காக பின்வருமாறு ஒட்டு கேட்டிருக்கிறார்.

”ஒரு இயக்குநராக இல்லை அப்பாவாக இந்தப்பதிவு. மகளுக்காக வாக்ககளிக்க தங்களிடம் கேட்பதில் மகிழ்வும் பெருமையும். விருப்பம் தங்களைச் சார்ந்தது.நன்றி. Missed call number8367796817. ”

சென்னை 28 படத்தின் மூலம் அறிமுகமான நடிகை விஜயலஷ்மி இயக்குனர் அகத்தியனின் மகள் . அதனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெற்றிட,  தனது அன்பு மகளுக்காக அப்பா ஓட்டு கேட்டிருக்கிறார்.