Asianet News TamilAsianet News Tamil

க்ரைம் ரேட் கூடிக்கிட்டே போகுதே... மதன் மீது குவிந்த புகார்கள் இவ்வளவா?

 பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் DCPCCB1@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அளிக்கலாம் என்றும், புகாரளிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்பட்டு பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர். 

Youtuber madan 100 online complaint received says cyber crime police
Author
Chennai, First Published Jun 22, 2021, 1:15 PM IST

ஆன்லைன் கேம்களில் யுத்திகளை கற்றுக்கொடுப்பதாக கூறி யூ-டியூப் சேனல்களை நடத்தி வந்த மதன் என்பவர் சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக பேசுதல், பண மோசடி என பல புகார்களின் அடிப்படையில் தேடப்பட்டு வந்தார். தலைமறைவான மதனை பிடிக்க சேலம் சென்ற போலீசார் அவருடைய மனைவியும், யூ-டியூப் சேனல் அட்மினுமான கிருத்திகாவை கைது செய்தனர். இதையடுத்து தருமபுரியில் தலைமறைவாக இருந்த மதனும் தனிப்படை போலீசிடம் சிக்கினார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதனை, வரும் 3-ஆம்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். 

Youtuber madan 100 online complaint received says cyber crime police

 

இதையும் படிங்க: #FathersDaySpecial கீர்த்தி சுரேஷ் டூ ரம்யா கிருஷ்ணன் வரை அப்பாவுடன் வெளியிட்ட... அரிய புகைப்பட தொகுப்பு...!

கைதான மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் மட்டும் 4 கோடி ரூபாய் பணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. தாம்பரம், பெருங்களத்தூரில் தலா ரூ 45 லட்சம் மதிப்பில் 2 வீடுகள் இருப்பதாகவும், 2 ஆடம்பரக் கார்கள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைககளை மதன் வாங்கிக் குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுப்பற்றியும் விசாரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி ஆபாசமாக பேசி பப்ஜி மதன் சேர்த்து வைத்த அனைத்தையும்போலீசார் பறிமுதல் செய்தனர், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. 

Youtuber madan 100 online complaint received says cyber crime police

மேலும் மதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அவரது லேப்டாப்களில் பதிவு செய்து வைத்திருந்த 700 ஆபாச வீடியோக்களும், யூ-டியூப் மூலம் வெளிவராமல் முடக்கப்பட்டது. மதனின் யூ-டியூப் சேனல்களை முடக்கும் படி யூ-டியூப் நிர்வாகத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியிருந்த நிலையில், அவருக்கு சொந்தமான Madan, Toxic Madan 18+, PUBG Madan Girl Fan, Richie Gaming YT யூ-டியூப் சேனல்களும் தற்போது முடக்கப்பட்டுள்ளன. 

Youtuber madan 100 online complaint received says cyber crime police

 

இதையும் படிங்க: முடியவே முடியாது... மூணு கோடி எக்ஸ்ட்ரா வேணும்... கறார் காட்டும் பிரபல நடிகை...!

​ஏற்கனவே தன்னுடைய வீடியோக்களை பிரபலமாக்குவதற்காக தன்னை புகழ்ந்து பேசினாலோ, திட்டினாலோ ரூ.5 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை இளம் பெண்களுக்கு மதன் பணம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வதக்கூறி பலரிடமும் மதன் பணமோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இதனையடுத்து பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் DCPCCB1@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அளிக்கலாம் என்றும், புகாரளிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்பட்டு பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர். அதன்படி, ஏமாற்றப்பட்டதாக மதன் மீது இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் மின்னஞ்சல் வாயிலாக புகார்கள் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios