Asianet News TamilAsianet News Tamil

குழந்தைக்கு பேய் பிடிச்சிருக்கு.. மூட நம்பிக்கையால் குழந்தையை அடித்தே கொன்ற தம்பதி..வெளியான வீடியோ !

மூட நம்பிக்கையினால் மகளை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

YouTube couple beat baby to death claiming to be possessed by demons
Author
First Published Aug 7, 2022, 2:58 PM IST

மராட்டிய மாநிலம் சுபாஷ் நகரை சேர்ந்த சித்தார்த் சிம்னி - ரஞ்சனா தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும், 5 வயதில்ஒரு மகளும் உள்ளனர். யூடியூப் சேனல் நடத்தி வரும் சித்தார்த் தன் மனைவி மற்றும் 2 மகள்களுடன் கடந்த மாதம் தஹல்கட் பகுதியில் உள்ள தர்காவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்று வந்த பின் 5 வயதான தனது 2 ஆவது மகளின் நடவடிக்கைகள் மாறியதாக சித்தார்த் நம்பி உள்ளார்.

YouTube couple beat baby to death claiming to be possessed by demons

தனது 2வது மகளுக்கு பேய் பிடித்துவிட்டதாக நினைத்து மூடநம்பிக்கையின் மிகுதியில் சித்தார்த் தனது மனைவி ரஞ்சனா, உறவினர் பிரியா ஆகியோருடன் இணைந்து தன் மகளுக்கு பேய் ஓட்டுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாந்திரீக செயலில் ஈடுபட்டுள்ளார். பேய் ஓட்டுவதாக நினைத்து மாந்தீரிகம், பூஜை செய்தபோது அந்த 5 வயது குழந்தையிடம் பெற்றோர் கேள்விகளை கேட்டுள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

அதற்கு அந்த சிறுமி பதில் அளிக்காமல் அழுதுகொண்டே இருந்ததால் சிறுமியை பெற்றோர் கடுமையாக அடித்துள்ளனர்.  சிறுமியின் கண்ணத்திலும், உடலிலும் கடுமையாக அடித்து, அதனை இதை வீடியோவும் எடுத்துள்ளனர். அடிதாங்க முடியாத குழந்தை அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, தனது மகளை பெற்றோர் சனிக்கிழமை அதிகாலை தர்காவுக்கு கொண்டு சென்றுள்ளனர். பின் அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு உடனடியாக அங்கிருந்து வேகவேகமாக சென்றுவிட்டனர். 

YouTube couple beat baby to death claiming to be possessed by demons

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் குழந்தையின் தந்தை சித்தார்த் சிம்னி, தாய் ரஞ்சனா மற்றும் அவரது உறவினர் பிரியா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..தைரியம் இருந்தால் இதற்கு போராட்டம் நடத்துங்க.. அண்ணாமலைக்கு சவால்விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி !

Follow Us:
Download App:
  • android
  • ios