Asianet News TamilAsianet News Tamil

தைரியம் இருந்தால் இதற்கு போராட்டம் நடத்துங்க.. அண்ணாமலைக்கு சவால்விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி !

முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களை நேரில் அழைத்து பாதிப்புகள் குறித்து விபரங்கள் கேட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

Minister senthil balaji challenged to bjp annamalai at kovai
Author
First Published Aug 6, 2022, 10:40 PM IST

கோவை திருச்சி சாலை சுங்கம் பகுதியில்  9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் குளநீர் வடிகாலை கோவை மாவட்ட ஆட்சியர்,மாநகராட்சி மேயர்,ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 'கோவை மாவட்டத்தை பொருத்தவரை மழை காரணமாக வால்பாறையில் மட்டும் அதிக மழை பெய்துள்ளது. 

Minister senthil balaji challenged to bjp annamalai at kovai

ஆனால் மின் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடுக்கப்பட்ட வடிவமைப்புகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து போதுமான நிதியை பெற்று அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களை நேரில் அழைத்து பாதிப்புகள் குறித்து விபரங்கள் கேட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

அதேபோல தமிழகத்தில் பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் மின் வாரியத்தில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் மின் கம்பங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 35 ஆயிரம் மின் கம்பங்கள் சிறப்பு பராமரிப்பில் மாற்றப்பட்டுள்ளன. 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மின் கம்பிகள் இருப்பு உள்ளது. மின் கம்பிகள் போதுமான அளவு இருப்பு உள்ளது. ஒரு மாத காலத்தில் தேவைகள் கணக்கிடப்பட்டு 10 லட்சத்து   77 ஆயிரம் பணிகள் சிறப்பாக நிறைவு பெற்றுள்ளது. 

கோவை அரசு மருத்துவமனை  மட்டுமல்லாமல் எந்தெந்த  இடங்களில் மழைநீர் தேங்குவது போன்ற குறைபாடுகள் உள்ளதோ அவை சரி செய்யப்படும்.  பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறிப்பிட்டு தனது தொகுதியில் என்னென்ன பணிகள் நடைபெறவில்லை என சொல்ல வேண்டும். அவரது தொகுதியான தெற்கு தொகுதியில் தான் இந்த வடிகால் அமைக்கும் பணி கூட நடைபெறுகிறது.கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1132 கோடி ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகள் கிடப்பில் இருந்த பணிகள் நடைபெற்றுள்ளது. 

Minister senthil balaji challenged to bjp annamalai at kovai

தைரியமும் திறமையும் இருந்தால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து போராட்டம் நடத்திய பிறகு, பொது விஷயங்களை பற்றி பாஜக பேச வேண்டும். பத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர் கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையிலும் மற்ற மாவட்டங்களை போல் கோவையிலும் அனைத்து திட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..அதிமுக ஆபீசுக்கு வரும் சசிகலா.. அடுத்து என்ன நடக்குமோ? பதற்றத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் !

Follow Us:
Download App:
  • android
  • ios