Asianet News TamilAsianet News Tamil

அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்… சென்னை மெரினாவில் பயங்கரம்… பகீர் பின்னணி!!

சென்னை மெரினா அருகே இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட நிலையில் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

youth was beaten to death at chennai marina
Author
First Published Apr 21, 2023, 7:36 PM IST | Last Updated Apr 21, 2023, 7:36 PM IST

சென்னை மெரினா அருகே இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட நிலையில் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள பொது பணித்துறை அலுவலகம் எதிரே மூன்று இளைஞர்கள் சாலையில் ரத்த காயங்களுடன் கிடந்துள்ளனர். இதை கண்ட பொதும்க்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஒருவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: ஆருத்ரா மோசடி : ஆர்.கே. சுரேஷின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்!!

அதில், உயிரிழந்த நபர் ஆவடியை சேர்ந்த விக்னேஷ் என்பதும் படுகாயமடைந்த நபர்கள் அரவிந்தன் மற்றும் சஞ்சய் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் சஞ்சய் பிறந்தநாளையொட்டி நேற்றிரவு விக்னேஷ், அரவிந்தன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர். பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு கடற்கரைக்கு சென்று அனைவரும் மது அருந்தி பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அதிகாலை சுமார் 2.30 மணியளவில் வீட்டிற்கு செல்ல புறப்பட்டபோது, சாலையில் உள்ள கடை ஒன்றின் அருகே விக்னேஷ் தனது ஹெல்மெட்டை வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.

இதையும் படிங்க: 15 ஆண்டில் 300 பேருக்கு விஷ ஊசி போட்டு கருணை கொலை? பகீர் வீடியோ வைரல்..!

திரும்பி வந்து பார்த்தபோது ஹெல்மெட் இல்லாததால் அதை தேடிக்கொண்டிருந்த போது அதனை பார்த்து அங்கிருந்த கடை ஊழியர்கள் சிலர் கடையில் திருட வந்திருப்பதாக நினைத்து விக்னேஷ், சஞ்சய், அரவிந்த் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அது கைகலப்பாக மாறியதால் ஆத்திரமடைந்த கடை ஊழியர்கள் அங்கிருந்த கட்டையால் விக்னேஷ், சஞ்சய் மற்றும் அரவிந்தன் ஆகியோரை தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதில் மூவரும் படுகாயமடைந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அடுத்து கடை ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios