ஆருத்ரா மோசடி : ஆர்.கே. சுரேஷின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்!!
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற சம்மனை ரத்து செய்யக் கோரிய நடிகர் ஆர்.கே.சுரேஷின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தது.
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை, வாக்குறுதிகளை அளித்து சுமார் 2 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான பணத்தை முதலீடாக பெற்று பொதுமக்களை ஏமாற்றியது. இது தொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பலரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நபர்களில் முக்கிய குற்றவாளியான ரூசோ வழக்கை நீர்த்துப்போகச் செய்ய நடிகரும், தயாரிப்பாளரும், பாஜக மாநில ஓபிசி பிரிவு மாநிலத் தலைவருமான ஆர்.கே.சுரேஷ் தங்களிடம் பணம் பெற்றுவிட்டு ஏமாற்றியதாக வாக்குமூலம் அளித்தார். இது தொடர்பாக முறையான ஆவணங்களுடன் நேரில் வந்து விளக்கம் அளிக்குமாரு ஆர்.கே.சுரேஷ்க்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
வாலிபரை கடத்தி 6 மணி நேரம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி துன்புறுத்தல் - 6 பேர் கைது
சம்மன் தொடர்பாக ஆர்.கே.சுரேஷ் அளித்துள்ள விளக்கத்தில் திரைப்படம் தயாரிப்பது தொடர்பாக மட்டுமே ரூசோ தம்மை தொடர்பு கொண்டதாகவும், இது தொடர்பாக மட்டுமே தங்களுக்குள் பணம் கைமாற்றப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ள சுரேஷ் மற்றபடி நிதிநிறுவன மோசடிக்கும், தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அரசியல் பலிவாங்கும் நோக்கத்திற்காகவே தம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மனைவி மற்றும் அண்மையில் பிறந்த குழந்தையின் மருத்துவ தேவைக்காக வெளிநாட்டில் இருப்பதால் நேரில் ஆஜராக வேண்டும் என்பதில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி காவல் துறையினர் பொதுவாக தேவையான ஆவணம் என்று குறிப்பிட்டுள்ளனர். என்னென்ன ஆவணங்கள் என்று குறிப்பிடவில்லை எனவே காவல் துறையினரின் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
நாகையில் ஆயுதப்படை பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
இதற்கு காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுரேஷின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் காவல் துறையினரிடம் விளக்கம் கேட்டு, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.