மகாராஷ்டிரா மாநிலம், கல்யாண் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா காம்ப்ளே(20). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவியை ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார். 

12 வயது பள்ளி மாணவியை தாய் கண்முன்னே 10 முறை கத்தியால் குத்திய சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ஒருதலைக்காததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம், கல்யாண் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா காம்ப்ளே(20). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவியை ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாய் ஆதித்யா காம்ப்ளே கண்டித்துள்ளார். இந்நிலையில், மாணவி நேற்று மாலை பள்ளியை முடித்துவிட்டு அங்கிருந்து டியூசன் சென்றுள்ளார். பின்னர், அந்த சிறுமி தனது தாயாருடன் வீட்டிற்கு வந்தார்.

இதையும் படிங்க;- திமுக நிர்வாகியை இதற்காக தான் கொலை செய்தோம்.! பாமக பிரமுகர் உட்பட 17 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்..!

அப்போது மாணவியின் வீட்டின் அருகே மறைந்திருந்த ஆதித்யா திடீரென வந்து சிறுமியின் தாயை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனையடுத்து தாயின் கண்முன்னே 10 முறை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வௌ்ளத்தில் சரிந்த சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து பினாயிலைக் குடித்து ஆதித்யா தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை சம்பவம் ஆதித்யா காம்ப்ளே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- பழிக்கு பழி.. நாட்டு வெடிகுண்டு வீசி.. லாரி செட் உரிமையாளர் வெட்டி படுகொலை.. தூத்துக்குடியில் பயங்கரம்..!