மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே இருக்கிறது பெருங்காமநல்லுர். இந்த ஊரைச் சேர்ந்தவர் கொல்லமுத்து. இவரது மனைவி ஜோதியம்மாள்(60). இந்த தம்பதியினருக்கு முத்துப்பாண்டி(32) என்கிற மகன் இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜோதியம்மாள் வசிக்கும் அதே பகுதியில் தனி வீட்டில் வசிக்கின்றனர்.

இதனிடையே அதிகமான கடன் பிரச்சனையில் முத்துப்பாண்டி இருந்திருக்கிறார். பலரிடம் கடன் வாங்கிய நிலையில், பணம் கொடுத்தவர்கள் திரும்ப செலுத்தச் சொல்லி கேட்டுள்ளனர். இதனால் முத்துப்பாண்டி தனது தாய் ஜோதியம்மாளிடம் கடன் அடைக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு ஜோதியம்மாள், "அரசின் 1000 ரூபாய் உதவித்தொகை பெற்று பிழைப்பு நடத்தி வருகிறேன். நான் எப்படி உனக்கு பணம் கொடுப்பது?" என்று கூறியுள்ளார். ஆனாலும் தாயிடம் பணம் கேட்டு முத்துப்பாண்டி தகராறு செய்துள்ளார்.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த முத்துப்பாண்டி, வீட்டில் கிடந்த உலக்கையை எடுத்து பெற்ற தாய் என்றும் பாராமல். ஜோதியம்மாளை சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த ஜோதியம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பின்னர் முத்துப்பாண்டி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி சிறுமியை பலவந்தமாக கற்பழித்த காமவெறி இளைஞர்..! அதிரடி தண்டனையளித்த நீதிமன்றம்..!

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், ஜோதியம்மாள் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த சேடப்பட்டி காவலர்கள், ஜோதியம்மாளின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் முத்துபாண்டியை தேடி வந்தனர். இந்தநிலையில், திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் முத்துப்பாண்டி சரணடைந்தார். அவரை கைது செய்த காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணம் தராததால் தாயை கொடூரமாக கொலை செய்த மகனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: களைகட்டும் ராயப்பேட்டை..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!