ஐயோ.. அம்மா என்ன காப்பாத்துங்க.. அலறிய இளைஞரை அரிவாளால் சல்லி சல்லியாய் வெட்டிய கும்பல்!
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரத்பாபு அலறி கூச்சலிட்ட படியே உயிர் பயத்தில் அவர்களிடம் தப்பிக்க முயற்சித்தார். ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஒட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.

சோழவரம் அருகே 4 பேர் கொண்ட கும்பலால் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடை லட்சுமி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரத்பாபு (25). கூலித் தொழிலாளி. இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர்.
இதையும் படிங்க;- திருச்செந்தூரில் குழந்தை கடத்தல்.. கைதான பெண் திடீர் உயிரிழப்பு.. காவல் நிலையத்தில் நடந்தது என்ன?
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரத்பாபு அலறி கூச்சலிட்ட படியே உயிர் பயத்தில் அவர்களிடம் தப்பிக்க முயற்சித்தார். ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஒட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. இவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வருவதற்குள் அந்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பித்தது.
இதையும் படிங்க;- 5 வயது சிறுமியிடம் 60 வயது கிழவன் செய்த வேலையை பார்த்தீங்களா? வசமாக சிக்கியதால் விபரீத முடிவு..!
இதுகுறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரத்பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.