காரைக்குடியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை; அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!
காரைக்குடி பேருந்து நிலையம் அருகில் ஒரு கொலையில் தொடர்புடைய வினித் என்று அழைக்கப்படும் அறிவழகன் என்ற 29 வயது இளைஞனை ஐந்து பேர் கொடூரமாக கொன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் கொலை வழக்கில் தொடர்புடையதால், காவல் நிலையத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் காரைக்குடி மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்த கொடூர கொலை காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
காரைக்குடி பேருந்து நிலையம் அருகே பரபரப்பான சாலையில் வினித் சென்றபோது, ஒரு எஸ்யூவி காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து பின்தொடர்ந்தது. வினித் தடுமாறி கீழே விழுந்தபோது, அந்தக் கும்பல் வீனித்தை சரமாரியாக அரிவாளால் ஈவு இரக்கமின்றி வெட்டினர். இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். ஆனால், யாரும் தடுக்க முற்படவில்லை. காட்சிகளைப் பார்த்து வர்ணித்தவாறு இருப்பது சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது.
பதிவான காட்சிகளில், நீல நிற சட்டை அணிந்த ஒரு நபர் தலையிட்டு பாதிக்கப்பட்டவருக்கு உதவ முயற்சிப்பதைக் காணலாம். ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து, வினித்தை சாலையில் போட்டுவிட்டு, ஐந்து பேரும் வேகமாக தங்களது வாகனத்தில் தப்பிச் சென்றனர். வினித் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
குரங்குக்கு போதை ஏற்றி சங்கிலியால் கட்டி வைத்து... இன்ஸ்டாகிராமில் அம்பலமான நைட் கிளப் பயங்கரம்!
கொல்லப்பட்ட வினித் மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே திருமோகூரை சேர்ந்தவர். வயது 27. காரைக்குடியில் நடந்த ஒரு கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. நிபந்தனை ஜாமீனில் இருந்து வந்த இவர், தினமும் காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். வழக்கம் போல் இன்றும் நடந்து சென்றார். போலீஸ் நிலையம் அருகில் இருக்கும் ஓட்டல் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.