குரங்குக்கு போதை ஏற்றி சங்கிலியால் கட்டி வைத்து... இன்ஸ்டாகிராமில் அம்பலமான நைட் கிளப் பயங்கரம்!

சங்கிலியால் பிணைக்கப்பட்ட குரங்கின் வீடியோக்கள் வைரலாக பரவிவரும் நிலையில், அதற்கு தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விடுதி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

WATCH: Nightclub in Kolkata faces severe backlash over chained, drugged monkey act

கொல்கத்தாவில் உள்ள ஒரு இரவு விடுதியில், போதைப்பொருள் கொடுக்கப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்ட குரங்கு ஒன்றை வாடிக்கையாளர்கள் வேடிக்கையாக கையில் பிடித்து விளையாடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. இருப்பினும் அந்த விடுதி நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட குரங்கின் வீடியோக்கள் வைரலாக பரவிவரும் நிலையில், நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி உட்பட பலர் இதுபோல விலங்குகளை கொடுமைப்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பவம் நடந்த டாய்ரூம் இரவு விடுதியின் நிர்வாகம் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோருகின்றனர்.

சனிக்கிழமை இரவு சமூக ஊடகங்களில் பரவிய வீடியோக்களில் ஒரு பெண், சங்கலியால் கட்டப்பட்டு அரை மயக்க நிலைஇயல் இருக்கும் குரங்கை அரவணைக்கும் காட்சி இடம்பெற்றது. மற்றொரு வீடியோவில், கூண்டில் அடைக்கப்பட்டு ஒடுங்கி அமர்ந்திருக்கும் குரங்கை வரும் காட்சி உள்ளது.

காங்கிரஸ் கூட்டத்தில் அடித்துக்கொண்ட நிர்வாகிகள்.. பதறவைக்கும் காட்சிகள் - வைரல் வீடியோ

"குறைந்தபட்சம் நான் இதற்காக வெட்கப்படுகிறேன் என்று சொல்லவேண்டும். இதை நீங்கள் நிச்சயமாகச் செய்தீர்கள். எந்தத் காரணத்தைக் கொண்டும் இந்தத் தவறைச் செய்யாதீர்கள்" என ஸ்வஸ்திகா முகர்ஜி கவலையுடன் கூறியுள்ளார். "இது வேற லெவல் கொடுமை. எவ்வளவு கீழ்த்தரமா போய்விட்டீர்கள்?" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர், அண்ணாமலை, குஷ்பூவை தரக்குறைவாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அதிரடியாக கைது!!

தொடர் கண்டனங்கள் குவிந்து வருவதால் டாய்ரூம் விடுதியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்யும் வசதி தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக விடுதி நிர்வாகம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், அந்தக் குரங்குகளுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் குரங்குகளுடன் வந்தவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்றுதான் கூறினோம் என்றும் தெரிவித்துள்ளது.

குரங்குகளுடன் விடுதிக்கு வந்த நபர்கள் அதனை ஏற்று தரைத்தளத்தில் உள்ள நுழைவாயில் பகுதிக்குச் சென்று அமர்ந்துகொண்டுவிட்டனர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், குரங்குகளுக்கு காயமோ அல்லது வேறு எந்த பாதிப்புகளோ ஏற்படவில்லை என்றும் விடுதி நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.

"எல்லோரையும் போல் விலங்குகள் மீது நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம்.  நாங்கள் இதுபோன்ற செயல்களைச் செய்ய மாட்டோம். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தியிருந்தால் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்றும் விடுதி நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

மாவட்ட ஆட்சியரை தள்ளிவிடும் அளவுக்கு வன்முறை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios