கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிபீக் தாஸ்(20). இங்கிருக்கும் கரியம்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண்ணுடன் பிபீக் தாஸிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்பெண்ணின் மகள் ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 15 வயது சிறுமியான இவருடன் பிபீக் தாஸ் பேசி வந்தநிலையில், இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். சிறுமியிடம் நெருங்கி பழகிய பிபீக் தாஸ், அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவத்திருக்கிறார். இதில் சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனிடம் சிறுமி கூறியிருக்கிறார். பிபீக் தாஸும் யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்து சிறுமிக்கு தாலி கட்டியுள்ளார்.

உச்சகட்ட போதையில் 15 வயது மகளோடு உல்லாசம் அனுபவிக்க துடித்த தந்தை..! ஆத்திரத்தில் மனைவி செய்த பகீர் செயல்..!

இந்தநிலையில் சிறுமி உடல்நலக்குறைவால் அவதிப்படவே, பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை பெற்றோரிடம் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது பிபீக் தாஸ் தன்னை காதலித்து உல்லாசம் அனுபவித்ததாக கூறியிருக்கிறார். இதையடுத்து சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக பிபீக் தாஸ் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர் மீது போக்சோவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச பட வேட்டை..! 600 பேருக்கு ஆப்பு ரெடி..!.