தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்(41). அந்த பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கீதா. இந்த தம்பதியினருக்கு பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற மகள் இருக்கிறார். 15 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். மகேஷ் அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

தினமும் குடித்து விட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். குடிப்பதுடன் மனைவியுடனும் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.  சம்பவத்தன்றும் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வீட்டிற்கு வந்த மகேஷ் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். அப்போது அங்கு வந்த பானுவை, தனது மகள் என்றும் பாராமல் கற்பழிக்க முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த பானு கூச்சல் போடவே அவரை கீதா மீட்டார். பின் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுள்ளார்.

4 வயது மகளுடன் மாடியிலிருந்து குதித்த தந்தை..! உடல்சிதறி ரத்தவெள்ளத்தில் பலி..!

இதில் ஆத்திரமடைந்த மகேஷ், மனைவியை தாக்கியத்துடன் கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த கீதா உடனடியாக கணவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் போக்சோவின் கீழ் மகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. குடிபோதையில் பெற்ற மகளையே தந்தை கற்பழிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச பட வேட்டை..! 600 பேருக்கு ஆப்பு ரெடி..!