திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே இருக்கிறது கல்லுக்குழி கிராமம். இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கியிருந்து கட்டிட பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் மேற்கு வங்க மாநிலம் தானா பகுதியைச் சேர்ந்த இம்தாத்அலி(24) என்னும் வாலிபரும் தங்கியுள்ளார். அங்கு நடைபெறும் கட்டிட பணிகளில் அவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர்கள் வேலை பார்க்கும் அதே பகுதியில் ராஜி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 7 வகுப்பு படிக்கிறார். இந்தநிலையில் சிறுமியிடம் பேச்சு கொடுத்த இம்தாத்அலி, அவரை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். இதை எதிர்பார்க்காத சிறுமி அதிர்ச்சியடைந்து தன்னுடன் படிக்கும் தோழிகளிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அவர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் அளித்தனர்.

ஆசிரியர்கள் மூலமாக சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. செய்வதறியாது திகைத்த பெற்றோர், உறவினர்கள் உதவியுடன் வடமாநில வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின் கொடைக்கானல் காவல்நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது போக்சோவில் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்... நள்ளிரவில் நடுக்காட்டுக்குள் கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..!