சென்னை அருகே இருக்கும் திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அரும்பாக்கம் அருகே இருக்கும் ஒரு கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த மாதம் 18ம் தேதி கல்லூரிக்கு சென்ற சிறுமி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது தாய் சிறுமியை இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.

பலரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த உசைனுல் முசரப்(19) என்கிற வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை விசாரிப்பதற்காக காவல்துறையினர் தேடினர். ஆனால் அவர் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் கோடம்பாக்கம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து முஷரப் சிறுமியுடன் தங்கியிருப்பதை அறிந்தனர். உடனடியாக அங்கு சென்ற போலீசார் வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை அதிரடியாக மீட்டனர்.

ஊரடங்கில் வெட்ட வெளிச்சமான கள்ளக்காதல்..! மனைவியை சந்திக்க வந்த கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற வாலிபர்..

அப்போது சிறுமியிடம் நடந்த விசாரணையில் கேட்டரிங் கல்லூரியில் படித்தபோது முஷரப்பும் அவரும் காதலித்ததாக கூறினார். படித்துக்கொண்டிருக்கும் போதே கல்லூரியிலிருந்து நின்ற முஷரப் அதன்பிறகு ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போதுதான் வீட்டை வாடகைக்கு எடுத்து சிறுமியை அழைத்து வந்து அங்கு தங்கியுள்ளார். மேலும் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து முஷரப் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.