விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே இருக்கிறது ஆலம்பாடி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கலையரசன்(22). கடலூரில் இருக்கும் தனது அக்கா வீட்டில் தங்கியிருந்து அங்கிருக்கும் ஒரு செல்போன் கடையில் வேலைபார்த்து வந்துள்ளார். அதே கடையில் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண்ணும் வேலை பார்த்து இருக்கிறார். நெருங்கி பழகிய இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் திருமணம் செய்து கொள்ளுவதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலியுடன் கலையரசன் உல்லாசம் அனுபவித்திருக்கிறார்.

பின் இருவரும் திருப்பூரில் இருக்கும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்துள்ளனர். அங்கு 'இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்றால் உன் நிர்வாண படத்தை எனக்கு அனுப்பு' என்று கலையரசன் காதலியிடம் தெரிவித்துள்ளார். அவரும் கலையரசனுக்கு அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு தொடர்ச்சியாக அது போன்று படங்களை கலையரசன் கேட்கவே அதிர்ச்சியடைந்த பானு, கலையரசனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். திருமணம் செய்யவும் மறுத்திருக்கிறார். இதனால் கலையரசன் பானு மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

அவரை பழிவாங்க நினைத்து, காதலிக்கும் போது தனக்கு அனுப்பிய நிர்வாண படங்களை சமூக வலைத்தளமான பேஸ் புக்கில் கலையரசன் பதிவு செய்தார். அதைக்கண்டு செய்வதறியாது திகைத்த பானு, உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த காவலர்கள் கலையரசனை அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Also Read: ஜோதிடர் மனைவியுடன் ஆசை தீர உல்லாசம்..! ஆத்திரத்தில் தொழிலதிபரை அறுத்துக்கொன்ற கும்பல்..!