இஸ்மாயில் பெங்களூருவில் இருந்து அடிக்கடி நரேஷ் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணுடன் இஸ்மாயிலுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. நரேஷ் இல்லாத நேரத்தில் வரும் இஸ்மாயில், கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பாராம். இதையறிந்த நரேஷ், இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடவில்லையாம்.

கள்ளக்காதலியை அபகரித்த உல்லாசம் அனுபவித்து வந்ததால் ஆத்திரமடைந்து நண்பனை கொன்று புதைத்த வாலிபர் ஓராண் டுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளத்தொடர்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் முதிமடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (23). எலக்ட்ரீசியன். இவரும் வி.கோட்டா அடுத்துள்ள நாராயண நகர் பகுதியை சேர்ந்த நரேஷ் என்பவரும் நண்பர்கள். இஸ்மாயில் கடந்தாண்டு பெங்களூருக்கு சென்று உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் கணவரை பிரிந்த இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இப்பெண்ணுக்கும், நரேசுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது உறவினர் மற்றும் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதை கண்டுகொள்ளாத நரேஷ், கள்ளக்காதலியுடன் ஒரே வீட்டிலேயே தங்கியுள்ளார்.

இதையும் படிங்க;- கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா போதும்.. வேலைக்கு போகாமலே சம்பளம்.. காமவெறி பிடித்த மேலாளரிடம் சிக்கிய பெண் ஊழியர்கள்.!

உல்லாசம்

இந்நிலையில், இஸ்மாயில் பெங்களூருவில் இருந்து அடிக்கடி நரேஷ் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணுடன் இஸ்மாயிலுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. நரேஷ் இல்லாத நேரத்தில் வரும் இஸ்மாயில், கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பாராம். இதையறிந்த நரேஷ், இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடவில்லையாம்.

கொலை

இதனால் ஆத்திரமடைந்த நரேஷ், இஸ்மாயிலை தீர்த்துக்கட்ட திட் டமிட்டுள்ளார். அதன்படி தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை திரும்ப தருமாறு கடந்த 5.1.2021 அன்று இஸ்மாயிலிடம் கேட்டுள்ளார். இதற்கிடையில் அன்று மாலை வி.கோட்டாவுக்கு வந்த இஸ்மாயில், நரேசுக்கு போன் செய்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அன்றிரவு இருவரும் வி.கோட்டாவில் உள்ள ஏரிக்கு சென்று மது குடித்துள்ளனர். ஆனால் இஸ்மாயிலுக்கு அதிக மது ஊற்றி கொடுத்துள்ளார். போதையில் இருந்த இஸ்மாயிலிடம் நரேஷ் கள்ளக்காதலியை விட்டு விடுமாறு கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- மாணவர்களை கதற விட்ட 45 வயது ஆசிரியை.. ‘வாங்க பழகலாம்’ என்ற பெயரில் குரூப்.. உல்லாச வீடியோக்கள்.. பணம் பறிப்பு

காவல் நிலையத்தில் புகார்

அப்போது இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நரேஷ், மதுபாட்டிலை உடைத்து இஸ்மாயில் தலையில் சரமாரி யாக தாக்கியுள்ளார். இதில், இஸ்மாயில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நரேஷ் அங்கேயே பள்ளம் தோண்டி சடலத்தை புதைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இஸ்மாயில் காணாமல் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வி.கோட்டா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இஸ்மாயிலின் செல்போனை வைத்தும் விசாரித்து வந்தனர். மேலும் நரேஷின் நடத்தையிலும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் நேற்று முன் தினம் விசாரணை நடத்தினர். இதில் இஸ்மாயிலை கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நரேஷை நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- 45 வயதில் இப்படி கூடவா ஆசைவரும்.. கருமம் கருமம்.. மாணவர்களிடம் எல்லை மீறிய ஆசிரியையின் காம லீலைகள்அம்பலம்.!