திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே இருக்கிறது கட்டிமேடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் தினேஷ் குமார்(24). தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). நான்கரை வயது சிறுமியான இவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

சிறுமியின் வீட்டு வழியாக அடிக்கடி செல்லும் தினேஷ் குமார், சிறுமியிடம் விளையாடுவார் என்று தெரிகிறது. சம்பவத்தன்றும் சிறுமியிடம் பேச்சு கொடுத்த தினேஷ் அவருடன் விளையாடிக்கொண்டிருந்தார். பின் சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி ஆள் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்ற அவர், பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். அப்போது சிறுமியை காணாது அவரது தாய் தேடி வந்துள்ளார். தினேஷ் சிறுமியிடம் தவறாக நடந்ததை அவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அக்கம்பக்கத்தினரை அழைத்து தினேஷிடம் தகராறில் ஈடுபட்ட சிறுமியின் தாய், பின் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தினேஷை அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானதாக தெரிகிறது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதியப்பட்டு கைதாகி இருக்கிறார்.

Also Read: சென்னைக்கு வரப்போகுது புல்லட் ரயில்..! ரெடியாகும் அதிரடி திட்டம்..!