டெல்லி ஐஐடியில் மாணவிகளை நிர்வாணமாக படம் பிடித்த இளைஞர் கைது!
டெல்லி ஐஐடியில் ரகசிய கேமிரா வைத்து மாணவிகளை நிர்வாணமாக படம் பிடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்

டெல்லி ஐஐடி பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராவை வைத்து மாணவிகளின் நிர்வாண படங்களை எடுத்த 20 வயதான துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஐஐடியில் அண்மையில் ஃபேஷன் ஷோ நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாணவிகள் உடை மாற்றும் போது அவர்களை மறைமுகமாக வீடியோ எடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் துப்புரவு தொழிலாளியை கைது செய்துள்ளனர்.
தங்களது நிர்வாண வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் போலீசார் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளானர். இதுகுறித்து கிஷன்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஐஐடி நிர்வாகத்தினர், இந்த சம்பவத்திற்கு தாங்கள் வருத்தம் தெரிவிப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் ஏஜென்சியின் ஊழியர் என தெரிவித்துள்ள டெல்லி ஐஐடி, இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும், போலீசார் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
5 வயது சிறுமியிடம் 60 வயது கிழவன் செய்த வேலையை பார்த்தீங்களா? வசமாக சிக்கியதால் விபரீத முடிவு..!
குற்றம் சாட்டப்பட்டவர் ஆறு மாதங்களாக ஐஐடியில் பணிபுரிந்து வருவதாகவும், சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஐஐடியில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராவை பயன்படுத்தி வீடியோ எடுத்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரின்பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிஷன்கர் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.