கோவையை அடுத்த சரணவம்பட்டியைச் சேர்ந்தவர் இளம்பெண் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 23. இவர் அதே பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்தார். எஸ்.என்.எஸ். கல்லூரி குழுமத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் சுப்பிரமணியம். 

இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இளம்பெண்களின் பின்னால் சென்று அவர்களைக் கட்டிபிடிப்பதும், முத்தம் கொடுப்பதுமாக பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சுப்பிரமணியம், கடந்த 2 ஆண்டுகளாகவே கல்லூரியில் பணிபுரியும் பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது சில்மிஷத்துக்கு ஆளாகும் பெண்கள், தங்களது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வேலையை விட்டு விட முடியாமலும், சுப்பிரமணியத்தின் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியும் வந்துள்ளனர். அவர்களது நிலைமையைப் பயன்படுத்திக் கொண்ட சுப்பிரமணியம், அவர்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். 

"

சுப்பிரமணியத்தின் செக்ஸ் சில்மிஷம் தாங்காமல், அவரது மகனும், கல்லூரியின் தலைமை நிர்வாகியுமான நளினிடம் இது குறித்து கவிதா, வாட்ஸ் அப் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அதில், சார் உங்கள நம்பிதான் எம்டி சார் கொடுத்த செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு அமைதியாக இருந்தேன். 

நேத்து கூட நீங்க பேசும் போது வீடியோல இருக்கிறது நான் இல்லைன்னு சொல்ல சொன்னீங்க. எனக்கு ஏதாச்சும் ஆச்சுனா நீங்களும் எம்டி சாரும்தான் காரணம். என்னால் முடியலை. நான் இருக்கிறது பிரயோஜனம் இல்லை என்று குமுறலோடு அனுப்பியிருந்தார்.

ஆனால், நளினோ, இத்தனை நாட்களாக நீங்கள் எதையும் சொல்லவில்லை. நான் உங்களை அதுபோல் நடந்து கொள்ளவும் சொல்லவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் கூட நீங்களும் நானும் பேசி கொண்டிருந்தபோது இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளதாகவே கூறியுள்ளீர்கள்.

"

எதுவாக இருந்தாலும் என்னை நேரில் சந்தித்து உங்கள் குறைகளை கூறுங்கள். உங்கள் பிரச்சினையை நான் சரி செய்கிறேன். உங்கள் மெசேஜை பார்த்ததும் அதிர்ச்சியாக உள்ளதாக அந்த வாட்ஸ் அப் மெசெஜில் நளின் அனுப்பியுள்ளார்.