Asianet News TamilAsianet News Tamil

வயதான மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி - என்ன தெரியுமா?

நாளுக்கு நாள் தமிழகம் முழுக்க செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

young mens snatched the covering chain from the old lady thinking it was gold
Author
First Published Sep 5, 2022, 9:38 PM IST

சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.இதுதொடர்பாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டாலும், குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி கிராமம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் பிச்சைமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவருக்கு வயது 65 ஆகும். 

young mens snatched the covering chain from the old lady thinking it was gold

மேலும் செய்திகளுக்கு..திராவிடியன் ஸ்டாக் என்ன தெரியுமா? பாரத மாதாவையும் வம்புக்கு இழுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா

இவர் இதே பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 11.45 மணியளவில், வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் தனியாக நடந்து செல்கின்றார். அவரை தொடர்ந்து ஹெல்மெட் அணிந்த இளைஞர் இரு சக்கர வாகனத்தில் அந்த மூதாட்டியை கடந்து செல்கின்றார்.

முன்னால் நடந்து சென்ற அந்த இளைஞர் திரும்பி நடந்து வந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு வேகமாக ஓடி, ஏற்கனவே தயாராக இரு சக்கர வாகனத்தில் காத்திருந்த இளைஞரின் பின்னால் அமர்ந்து மின்னல் வேகத்தில் பறந்து சென்று விட்டனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பயந்து போய் மூதாட்டியை விசாரித்த போது அது கவரிங் செயின் என கூறியதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். 

மேலும் செய்திகளுக்கு..இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர்..மார்கரெட் தாட்சரின் மறுஉருவம் - யார் இந்த லிஸ் டிரஸ் ?

young mens snatched the covering chain from the old lady thinking it was gold

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோன்றிமலை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. செயின் பறிப்பில் ஈடுபடுபடுபவர்கள் பெரும்பாலும், சிரியவர்களே காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..கோவிலில் மருமகன் சபரீசனுடன் துர்கா ஸ்டாலின்.. பகுத்தறிவு இயக்கத்துக்கு சோதனையா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios