திராவிடியன் ஸ்டாக் என்ன தெரியுமா? பாரத மாதாவையும் வம்புக்கு இழுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா
சீன வைரஸ் மட்டுமல்லாது சீன பொம்மைகள், சீனப்பட்டாசுகள் எல்லாமே ஆபத்தானது. சீனா உற்பத்தி செய்து அனுப்பிய கம்யூனிஸ்ட் கட்சி வரை அனைத்துமே தரமற்றவை தான்.
கோவை பூ மார்க்கெட் பகுதியில் இருக்கும் தெப்பக்குளம் மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய உறுப்பினர் எச். ராஜா பங்கேற்றார். இதில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பங்கேற்றார். மேடையில் பேசிய அவர், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக சீன வைரசால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முடியாமல் போய்விட்டது.
மேலும் செய்திகளுக்கு..இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர்..மார்கரெட் தாட்சரின் மறுஉருவம் - யார் இந்த லிஸ் டிரஸ் ?
சீன வைரஸ் மட்டுமல்லாது சீன பொம்மைகள், சீனப்பட்டாசுகள் எல்லாமே ஆபத்தானது. சீனா உற்பத்தி செய்து அனுப்பிய கம்யூனிஸ்ட் கட்சி வரை அனைத்துமே தரமற்றவை தான். இனிமேல் தான்டா உள்ளது என்று கனல் கண்ணன் கூறி இருக்கிறார். கனல் கண்ணனை வெட்கம் கெட்டவர் தான் கைது செய்வார்கள். திராவிடர்கள் கருத்து திருடர்கள். நாத்திகம் ஒன்றும் ஈவேரா கண்டுபிடித்தது இல்லை.
திராவிடியன் ஸ்டாக் என்பதே மானங்கெட்டவர்கள் தான். தமிழ்நாடு அரசாங்கம் மூளை கெட்டு திரியக்கூடாது. தென்னாடுடைய சிவனே போற்றி என்று சொன்னால் பாரத நாடு முழுமைக்கும் தலைவர் சிவன் என்று அர்த்தம். இறை தூதர்கள் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள்.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
பாரத மாதாவிற்கு நாம் என்ன குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டோமா என்ன ? இறைத்தூதர்கள் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள். வெடி மருந்தின் மீது தமிழக மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏனென்றால் இங்கு திராவிடம் ஆடல் உள்ளது. அரசியல்வாதிகள் மதத்திற்குள் வராமல் இருந்தால் ஆதீனங்கள் அரசியல் பேச மாட்டார்கள் என்று பேசினார்.
மேலும் செய்திகளுக்கு..கோவிலில் மருமகன் சபரீசனுடன் துர்கா ஸ்டாலின்.. பகுத்தறிவு இயக்கத்துக்கு சோதனையா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்