பள்ளி மாணவியை ஏமாற்றி காதல் வலையில் சிக்கவைத்த, திருமணமான இளைஞரை, அந்த பெண்ணின் அண்ணன்கள் ஓட ஓட விரட்டி அரிவாள் வீசியும், இரும்புக் கம்பியால் தாக்கிய  வீடியோ வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திம்மராய சமுத்திரத்தைச் சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் மணிகண்டனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி , மனைவி அவரைப் பிரிந்து வேறொருவருடன் ஏற்பட்ட தகாத உறவால் அவருடனே சென்றுவிட்டதாகக் சொல்லப்படுகிறது. இந்நிலையில், மனைவி வேறொருவருடன் ஓடிப்போன சோகத்தில் இருந்த மணிகண்டன் அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பிரியங்காவை காதல் வலையில் வீழ்த்த முயற்சித்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனை சிறுமியின் அண்ணன்களான சிவா, சுரேஷ், சந்தோஷ் மூன்று பெரும் சில நாட்களுக்கு முன்பாக கண்டித்துள்ளார். ஆனால், அதனைக் கண்டுகொள்ளாத மணிகண்டன், தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தனியே சந்தித்து பேசுவதை வழக்கமாக செய்துள்ளார்.

இந்நிலையில் புதன்கிழமை மாலை அகிலாண்டேஸ்வரி கோவில் அருகே மணிகண்டனை சிறுமியுடன் அவரது அண்ணன்கள் பார்த்துள்ளனர். ஆத்திரமடைந்த அவர்கள் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அரிவாள் மற்றும் இரும்புக்கம்பி போன்ற ஆயுதங்களுடன் மணிகண்டனை துரத்து துரத்துன்னு துரத்தியுள்ளனர்.

உயிருக்கு பயந்து தெறித்து ஓடிய மணிகண்டன், அங்குள்ள அடகுக் கடை ஒன்றுக்குள் நுழைந்த மணிகண்டனை வெளியே இழுத்து அக்கும்பல் சரமாரியாக வெளுத்தது வாங்கியுள்ளனர். இந்தக் காட்சிகள் அந்த கடையின் வெளிப்புறத்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ரத்தம் சொட்ட சொட்ட புரண்டுக்கொண்டிருந்த கொத்தனார் மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தப்பியோடிய அந்த பெண்ணின் அண்ணன்கள் நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.