தனது காதலி, காதலியின் தங்கை, அக்கா என மூவரையும் ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு 2வது திருமணம் செய்து கொண்ட ரோமியோவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் வசிக்கும் ஒரு இளம்பெண் சேலம், கொளத்தூரில் வசிக்கும் கார்த்திக் என்பவரை காதலித்துள்ளார். இந்த காதல் ஜோடி பல இடங்களில் சுற்றித் திரிந்ததால் அப்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அதேபோல், அப்பெண்ணின் தங்கை இளவரசியையும் கார்த்திக் காதலித்து ஏமாற்றி கர்ப்பம் ஆக்கியுள்ளார்.

இந்த விவகாரம் அக்காவுக்கு தெரிய வந்ததால் தனது தங்கைக்கு வாழ்க்கை கிடைக்க வேண்டும் என தனது கருவை கலைத்துவிட்டு, கார்த்தியை தனது சகோதரி இளவரசிக்கு கார்த்தியை திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களில் கார்த்திக் தலைமறைவாகி இருக்கிறார். 

இதுகுறித்து விசாரித்த போது, இளவரசியின் பெரியம்மா மகளை 2வது திருமணம் செய்து திருப்பூரில் கார்த்திக் வசிப்பது தெரியவந்தது. அங்கு சென்று பார்த்த போது அந்த பெண்ணும் கர்ப்பமாக இருந்துள்ளார். இதுபற்றி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனால் கார்த்தி மீது இளவரசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தன்னுடைய அக்காவை  காதலித்துவிட்டு தன்னிடம் பழகி தன்னை கர்ப்பமாக்கியது மற்றும் இன்றி, தன்னுடைய தங்கையையும் ஏமாற்றி கர்ப்பமாக்கி, அந்த கர்ப்பத்தை தங்களுக்கு தெரியாமல் கலைத்துள்ளார் கார்த்தி. இதையறிந்த கார்த்திக் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர். ஒரு நபர் காதலி மற்றும் அவரின் இரு சகோதரிகளை ஏமாற்றி திருமணம் செய்த விவகாரம் அவர்களின் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.