கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண், லோகேஷ் தன்னிடம் மறைத்து வைத்திருந்த திராவகத்தை மோகனப் பிரியா மீது ஊற்றி விட்டு தப்பி ஓட முயன்றார்.

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் கடை நடத்தி வருபவர் விவேகானந்தன். இவரது மனைவி மோகனபிரியா. மோகனபிரியாவின் சகோதரி லட்சுமிக்கும், ஆதம்பாக்கம் மேடவாக்கம் சாலையை சேர்ந்த டிரைவர் லோகேஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக தகாத உறவு இருந்துள்ளது. இதனால், இருவரும் வெளியில் லாட்ஜில் ரூம் போட்டு உல்லாச வாக்கை வாழ்ந்து வந்துள்ளனர். 

ஒரு நாள் மோகனபிரியாவின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு வந்த லோகேஷ்   மோகனபிரியாவின் தங்கை லட்சுமியோடு தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அப்போது திடீரென வீட்டிற்கு வந்த மோகனப்பிரியா தனது அக்காவின் இந்த அசிங்கத்தை கண்டித்துள்ளார். அதுமட்டுமல்ல லோகேஷையும் அசிங்க அசிங்கமாக திட்டியுள்ளார். இதனால் அவர் லோகேசை மோகனப்பிரியா சந்திப்பதை தவிர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஷ் தன்னிடம் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை மோகனபிரியா மீது ஊற்றி விட்டு தப்பி ஓட முயன்றார்.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் லோகேசை மடக்கிப்பிடித்து செம அடி அடித்தனர். பின்னர் அவரைப் பிடித்து ஆதம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.