காதலிப்பதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. வாலிபருக்கு கோர்ட் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் கடந்த 2016ம் ஆண்டு உடல் சிதைந்த நிலையில் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவலாளி ராஜேந்திரன் என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
செஞ்சி கோட்டையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் கடந்த 2016ம் ஆண்டு உடல் சிதைந்த நிலையில் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவலாளி ராஜேந்திரன் என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ரிஹானாபர்வீன்(27) என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: பெண் குளிப்பதை ரகசிய கேமரா மூலம் அங்குலம் அங்குலமாக ரசித்த ஹவுஸ் ஓனர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
இவரும் புதுச்சேரி ஜெயகணேஷ் நகர் களத்துமேடு பகுதியை சேர்ந்த விஜி (34) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ரிஹானாபர்வீனை செஞ்சி கோட்டைக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், பெரிய கல்லால் அவரது தலையில் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: புருஷனை கழட்டிவிட்டு எஸ்கேப்பான மனைவி.. இறுதியில் கள்ளக்காதலனுக்கும் அதிர்ச்சி கொடுத்த பெண்..!
இதையடுத்து விஜியை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு அடைந்ததை அடுத்து நீதிபதி ஹெர்மிஸ் தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட விஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டதை அடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.